நான்

நான் ஜானகிராமன். ஒரு தன்னார்வ நிறுவனத்தில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புப் பணி செய்து வருகிறேன். சொந்த ஊர் திருத்தணி.  எனக்கு புத்தகம் பிடிக்கும். பள்ளி காலத்தில் கல்கியுடைய சரித்திர நாவல்களை இரவு பகல் பார்க்காமல் படித்து என்னை நானே வந்தியத்தேவனாகவும் நரசிம்ம பல்லவனாகவும் கற்பனை செய்து, எனது தம்பியுடன் காகிதக்கத்தியில் சண்டைப்போட்ட காலத்திலிருந்து அடுத்தடுத்து நகர்ந்து எனது கற்றலை பல தளங்களுக்கு விரிவு செய்ய முயற்சிக்கிறேன். தத்துவம், சினிமா, அரசியல் ஆகியவை எனது விருப்பங்கள். விரிவாக பேச, தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். [jkramn(at)gmail(dot)com]

19 thoughts on “நான்

  1. உங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    1. மிக்க நன்றி சிரவணன். தொடர்ச்சியாக எழுத விருப்பம் தான். எழுதுவது என்னை நானே உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது. தொடர்ந்து உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  2. In DHAN, I am keeping touch with all colleagues within tamilnadu. But you are something different from all. Basically, people are concentrating a few things, i.e. education, political, development, computer, literature, etc. But you are familiar with all…….

    In DHAN, When I am trying to do creative design i always think to get ideas from few colleagues including you.

    You are such a brilliant guy… I am so proud to get good friends like you….

    1. அன்புக்குறிய தனபாலன். உங்களுடைய பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உண்மையில் நம் எல்லாருடைய மனதிலும் புத்தாக்கம் மறைந்துள்ளது. அதை வெளிக்கொண்டுவருவதில் தான் நாம் தவறிவிடுகிறோம். புதிய வடிவமைப்புகளை உருவாக்குதல், வித்தியாசமாக சிந்தித்தல், கணிப்பொறியில் புலமை என உங்களுக்கிருக்கும் திறனை பயன்படுத்தி, இணையத்தில் நீங்களும் நிறைய சாதிக்கமுடியும். மிக்க நன்றி தனபாலன்.

    1. இனிய சிவபாலா. வலைத்தள வருகைக்கு நன்றி. மன்னிக்கவும். நான் இப்போது தான் உங்களுடைய பின்னுட்டத்தைப்பார்த்தேன். தமிழில் கருத்திடுவது மிக எளிது. NHM Writer என்ற சிறிய, எளிமையான மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். பிறகு உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியுமென்றால் alt+3 யை அழுத்திவிட்டு தமிழில் யூனிகோட் முறையில் கருத்துக்களை உள்ளிடலாம். தமிழ் தட்டச்சு தெரியவில்லை என்றால் alt+2 வை அழுத்தி போனிடிக்ஸ் முறையில் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சி தமிழில் பெறலாம். அல்லது Google transliteration எனும் ஆன்லைன் சேவையை பயன்படுத்தியும் கமண்டிடலாம். (To Download NHM Writer, you may visit the website: http://software.nhm.in/products/writer)

  3. தங்கள் வலைப்பதிவை கண்டேன். சரளமான நடையில் நல்ல கருத்துகள். முயற்சிதிருவினையாகும் புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதனை வாசிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. மேலும் நவீன தமிழ் சினிமா பற்றிய உங்கள் பார்வையும் பாராட்டுக்குரியது

    Ramesh

    1. அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ரங்கா. படைப்பாளிகள் விரிவான படிப்பாளர்களாகவும் இருந்தால் அற்புதம் நிகழும் என்பது எனது எண்ணம். நீங்கள் அதை செய்து வருகிறீர்கள். தொடர்ந்து செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு ரசிகனாக, எப்போதும் சினிமா எனக்கு வியப்பைத் தரும் சக்தி. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s