இரண்டு திரைப்படங்கள் (Ran & God Father)


Succession. அதிகாரத்தை அடுத்தத் தலைமுறைக்கு மாற்றியளித்தல். இந்த ஒரு செயல்பாடு தான் உலகின் பெரும்பாலான வரலாற்று சம்பவங்களுக்கு அடிப்படையாக இருந்துள்ளது, இருந்து வருகிறது, இருக்கும். குடும்ப அளவில் ஆரம்பித்து, நிறுவனங்களில், அரசு அமைப்புகளில், கட்சி சார்ந்த எல்லா நிலைகளிலும் ஒரு தலைமுறையின் தலைவர் தமது வயோதிக காலத்தில் அடுத்தத் தலைமுறைக்கு அதிகாரத்தை மாற்றித்தருவதில் தான் எல்லா பிரச்சனைகளும் அதிசயங்களும் நிகழ்கின்றன.

சமீபத்தில் நான் யதேச்சையாக பார்த்த இரண்டு எதிர்எதிர் தன்மைகள் கொண்ட திரைப்படங்கள் அதையே ஞாபகப்படுத்தின. மேற்கத்திய தேசத்தின் பிரான்சிஸ் கொப்பலாவுடைய God father (1972) and கீழை தேசத்தின் அகிரா குரோசவாவுடைய Ran (1985). இவை இரண்டுமே உலக சினிமாவில் என்றும் அழியாத படங்கள். இந்த இரண்டு படங்களின் அடிநாதமே அதிகாரத்தை மாற்றியளித்தல் என்பதாகத் தான் இருக்கிறது.

இரண்டு படத்திலுமே அதிகாரத் தலைமைக்கு 3 மகன்கள். அதில் மூன்றாவது மகன் மற்ற இருவரை காட்டிலும் திறமையானவர். நம்பிக்கையானவன். ஆனால் நமது சமூகத்தில் யதேச்சையாக நிகழ்ந்துவரும் மூத்த மகனுக்கு தரும் அதிக முன்னுரிமையை இரண்டு படங்களும் பகடி செய்கின்றன.

காட் பாதர் படத்தில் பெரியவர் மிகச் சரியான முடிவெடுத்து அதன் போக்கில் நிகழும் விளைவுகளே கதை என்றால் ரேன் படத்தின் பெரியவர் மிகத் தவறான முடிவெடுத்து அதன் விளைவாக கொள்ளும் மனஉளைச்சல் + அதன் வெளிப்பாடு என திரைக்கதை கபடி ஆடியிருக்கும். செமயான படங்கள்.

அதிகாரத்தை மாற்றித் தருவதிலுள்ள சிக்கலையும், அதன் அரசியலையும் புரிந்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் இந்த இரண்டு படங்களையும் தவிர்க்க முடியாது.

Wonderful watching experience.

 

Dear Zindagi (2016)


16387873_10211936037666653_5121265677510597282_n

சமீபத்தில் பார்த்த நல்ல, வாழ்க்கை மீது நம்பிக்கை தர வைக்கும், சிறந்த படம். ஷாருக்கான் தன்னுடைய அதிக ஆர்பாட்டமில்லாத நடிப்பில், ஆலியா பட் தனித்துவ நடிப்பில் மிரட்டியிருக்கும் படம். கதைக்களம் மிக எளிமையானது. ஹாலிவுட்டில் வெளிவந்த கராத்தே கிட் சீரிஸ் போன்றது. வாழ்வின் துவக்கத்தில் இருக்கும் ஒரு இளைஞர் மிகத் திறமையானவராக ஆனால் முன்கோபக்காரராக, யாரையும் மதிக்காதவராக, அடமென்ட்டாக இருப்பார். அவரை நல்வழிப்படுத்தி வாழ்வை கொண்டாடும் முறையை கற்றுக்கொடுக்க மியாகி போன்ற ஒரு குரு இருப்பார். இந்த படத்தில் ஷாருக் மியாகியாகியாக நடித்திருக்கிறார்.

குழந்தை வளர்ப்பு, உறவுமுறைகளை பேணுதல், சமகால பணி – குடும்ப சமநிலை ஆகியவை குறித்த நல்ல படிப்பினைகளை இந்த படத்தில் பெறலாம். பெண் இயக்குனர் என்பதால் பெண்ணிய சிந்தனைகள், சமூகத்தை பெண்ணுடைய பார்வையில் பார்க்கும் விதம் அழகாக பதிவாகியிருக்கிறது. வசனங்கள் அற்புதம். மிக முக்கியமாக விஷயம், இந்த படத்தில் ஷாருக்குக்கு டூயட் எல்லாம் வைக்கவில்லை. அதுக்கும் மேல, டைட்டில் கார்டில் முதலில் ஆலியா பட்டின் பெயர் போட்டுவிட்டு அதற்கு பிறகு தான் ஷாருக்கின் பெயரே போடப்படுகிறது. இதையெல்லாம் தமிழ் திரையுலகில் நினைச்சிக்கூட பாக்கமுடியாது..

நிச்சயம் பார்க்கலாம்.

Tale of Tales (2016)


16507821_10211936277392646_6987425298351210917_n

தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத ஜானராக ஃபேன்டசி படங்கள் இருக்கின்றன.

நடைமுறையில் சாத்தியமாகாத கற்பனையை கனவு போல விரிக்கும், க்ரியேட்டரின் சுதந்திரத்துக்கு முழு வாய்ப்பளிக்கும் இந்த வகைப்படங்கள் தமிழில் பழிவாங்கும் படமாகவோ, குழந்தைகளுக்கான படமாகவோ தான் சுருங்கிவிட்டிருக்கிறது. முன்பு விட்டலாச்சார்யா, ராம.நாராயணன் போன்றவர்கள் ஒரே டெம்ப்ளேட்டில் இந்த படங்களை எடுத்துவந்தனர். சமகாலத்தில் சிம்புத் தேவன் இந்த வகை படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இதுவரை தமிழில் வெளிவந்த ஃபேன்டசி படங்களின் உச்சம் என செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை குறிப்பிடலாம். அந்த படத்தின் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் மிக முக்கிய படம்.

ஹாலிவுட்டில் மிக அதிகம் வெளிவரும ஜானராக ஃபேன்டசி படங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பத்துக்கு எட்டு படங்கள் குழந்தைகளுக்கான படங்கள். ரெண்டு படங்கள் பெரியவர்களுக்காக எடுக்கப்பட்டாலும் சிறப்பான படங்கள் எப்பவாவது ஒரு முறை தான் வரும். கடந்த வருடம் மேட்டியோ கர்ரோன் இயக்கத்தில் வெளிவந்த tale of tales திரைப்படம் அப்படி பூத்த குறிஞ்சி மலர். இதுக்கு முன்னாடி, மறக்கமுடியாத ஃபேன்டசி படம் என்றால், குல்லர்மோ டெல்டோராவுடைய Pan’s Labyrinth தான். அதற்கடுத்து இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.

17ம் நுற்றாண்டின் இத்தாலிய கவிஞர் Giambattista Basileடைய கதைத்தொகுப்பான Pentamaroneல் இருந்து மூன்று கதைகள் ஒன்றை ஒன்று பிணைக்கப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்த மூன்று கதைகளுமே அன்பின் இருண்மைபக்கத்தை பேசுகின்றன. அன்பு அளவுக்கு அதிகமாகும் போது ஏற்படும் சிக்கல்களையே முன்வைக்கிறது. கணவரின் உயிரை இழந்து பெற்ற தனது மகனின் மீது பேரன்பு வைக்கும் அரசி, தாய் இல்லாமல் தனது மகளை வளர்க்கும் இன்னொறு அரசன், அவர் ஒரு விசித்திர பூச்சியின் மீது வைக்கும் அன்பு அதனால் வரும் சிக்கல், வெளியுலகத்தையே காணாத இரண்டு வயோதிக சகோதரிகளின் அன்பு, அவர்களில் ஒருவர் இளமையுடன் திரும்பி அந்நாட்டு அரசனை மணம்முடிக்க மற்றொரு சகோதரி சந்திக்கும் பிரிவின் சிக்கல் என மூன்று கதைகளும் ஒன்றை ஒன்று முடிச்சுப்போட்டு நல்ல காட்சி அனுபவத்தை தருகின்றன.

படத்தின் லேண்ட்ஸ்கேப், காட்சிப்படிமங்கள், ஒளிப்பதிவு அதி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. சர்க்கஸ் கலைஞர்கள் மூன்று கதைகளிலும் வருகின்றனர். அதே போல மரணம் மூன்று கதைகளிலும் துரத்துகிறது. படத்தில் இடம்பெரும் மான்ஸ்டர்கள் ஒருவித மாய அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு தருகிறது.

இத்தாலியின் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற இயக்குனருக்கு இது முதல் ஹாலிவுட் படம். மிகச்சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் குறித்து பெரிய கவனம் ஏற்படாதது வியப்பளிக்கிறது.

மாற்றுசினிமா விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

The bullet vanishes (மாயத் தோட்டா) 2012


e

சீனாவின் ஷங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களை திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான்.

முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பை சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்த பெண்ணின் மீது தான் அபாண்டமாக குற்றம் சுமத்தியிருந்தால் இந்த துப்பாக்கி என்னை தண்டிக்கட்டும் என டிரிக்கரை அழுத்த, வெற்று சத்தத்துடன் டிரிக்கர் அமைதியாகிறது. பிறகு அதே துப்பாக்கியை மீண்டும் சுழற்றி அந்த பெண்ணிடம் கொடுத்து அவளை சுட்டுக்கொள்ளச் செய்யும் போது துப்பாக்கியின் தோட்டா உண்மையிலேயே வெடித்து அவள் இறக்கிறாள்.

இது தவறிழைத்த அவளுக்கு கடவுள் தந்த தண்டனை என அறிவித்து, சடலம் அப்புறப்படுத்தப்படுகிறது. இப்படித் தான் இந்த படம் ஆரம்பிக்கிறது.

அதற்கடுத்து அந்த தொழிற்சாலையில் அடுத்தடுத்து மேலாளர் அளவில் பணிபுரியும் சிலர் அடுத்தடுத்து மர்மான முறையில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அவர்களை சுட்ட தோட்டாக்களும் கிடைப்பதில்லை. தொழிலாளிகளிடையே இந்த கொலைகளை செத்து போன பெண்ணின் ஆவி செய்வதாக பீதி பரவுகிறது.

அந்த பகுதியில் இரண்டு போலிஸ்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன், பூமியில் பதிந்த காலடி தடத்தை வைத்தே அந்த காலடிக்கு சொந்தமானவன் எவ்வளவு உயரம், என்ன வயது, எவ்வளவு எடை, அவனது நடைபழக்கம் ஆகியவற்றை ரொம்ப லாஜிக்கலாக, உண்மைக்கு நெருக்கமாக சொல்லக்கூடியவன். அந்த பிராந்தியத்திலேயே துப்பாக்கியை மிக வேகமாக உபயோகிக்ககூடியவன்.

மற்றொருவன், துக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட உடலுக்கும், கொலை செய்யப்பட்டு பின்னர் துக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் உடலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அறிய தானே தன்னை துக்கு மாட்டிக்கொண்டு, உடலில் ஏற்படும் மாற்றங்களை குறித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட வழக்கின் உண்மைத் தன்மையை கண்டறியும் வீரியம் கொண்டவன். இவர்கள் இருவரும் தொழிற்சாலையில் நிகழும் தொடர்கொலைகளை கண்டறிய இணைகிறார்கள். பிறகு படம் அதிரிபுதிரி வேகத்துடன் செல்கிறது.

குறிப்பாக மாயமான தோட்டாக்கள் எப்படி தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராயும் முயற்சிகளும் பனிக்கட்டியினால் கூட தோட்டாவை மாதிரியாக செய்து பார்த்து அதனால் கொலை நிகழ்ந்திருக்குமா என யோசித்திருப்பார்கள். கடைசியில் உண்மையான உண்மையை கண்டுபிடிக்கும் போது வாவ் என இருக்கும். அடுத்த முடிச்சு, துப்பாக்கி முதலாளி பயன்படுத்தும் போது வெடிக்காமல் குறிப்பிட்ட நபர் பயன்படுத்தும் போது மட்டும் வெடிப்பது. இதில் ப்ராபபளிட்டி தியரியை தாண்டி செய்யப்படும் கோக்குமாக்கு வேலையை கண்டறியும் வித்தை, மிக சுவாரசியமாக விரிந்திருக்கும்.

இதே போல படம் முழுக்க சிலந்தி வலை போல பரவியிருக்கும் முடிச்சுக்கள். அதனை ஒவ்வொன்றாக விடுவிக்கப்படும் போது பெரிய காட்சிஅனுபவத்தை தருகிறது. எல்லாமே சூப்பர் என்றாலும் எனக்கு தனிப்பட்ட வகையில் இந்த படத்தின் கடைசி காட்சி பிடிக்கவில்லை. அதற்கு முன்பே இந்த படத்தை முடித்திருக்கலாம். கடைசி காட்சி சீனதேசத்தின் அதிகாரமையங்களை பகடி செய்ய எடுக்கப்பட்டதாகவும் கருதமுடிகிறது.

படத்தின் அடுத்த கவனம், அதன் பிரசன்டேஷன். 100 வருடத்துக்கு முந்தைய காலகட்டத்தை பளிங்கு சுத்தமாக நம் கண்முன்னே நிறுத்துகிறார்கள். ஒவ்வொறு ப்ரேமும் அவ்வளவு அழகு, அற்புதம். இந்த படம் 2009ல் வெளிவந்த ஷெர்லாக் ஹோம்ஸ்ன் இன்ஸ்பரேஷன் என்று சொல்லலாம். நிச்சயம் நம்ம ஊர் இயக்குனர்கள் போல ஈ அடிச்சான் காப்பி அடிக்கவில்லை. ஷெர்லாக் படத்தின் ப்ளாஷ்பேக் யுக்தி, வெடிக்கிடங்கில் இருந்து தப்பிப்பது, தன்னை துக்கு மாட்டிக்கொண்டு அதன் விளைவுகளைஆராய்வது என பல காட்சிகள் இந்த படத்திலும் இருந்தாலும் படத்தின் கான்டெக்ஸ்ட் முற்றிலும் வேறாகவே இருப்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை.

குறைந்த பட்ஜெட்டில் மிக அதீத வெளிப்பாட்டைக் கொடுக்கும் இந்த படம் தொழில்நுட்பம், காஸ்டிங் என அனைத்திலும் ஆசிய சினிமா சோடை போகவில்லை என எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற படங்கள் தமிழில் எப்பவரும் என்ற எதிர்பார்ப்பை ஏக்கத்துடன் ஏற்படுத்துகிறது. அது வரை இந்தவகை படங்களை டப்பிங்காவது செய்து வெளியிடலாம்.

திதி (Thithi, Kannada, 2016)


லோகர்னோ ஃப்ளிம் பெஸ்டிவலில் இரண்டு கோல்டன் லியோபார்ட் விருது, சிறந்த கன்னட படத்துக்கான தேசியவிருது, ப்ரான்சிஸ் போர்ட் கொப்பலா, மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள் என க்ரெடிட் கொடுத்த படம், அனுராக் காஷ்யப் செமயா பாராட்டிய படம் என திதி எக்கச்சக்க வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.

கதை, உத்தர கர்னாடகாவின் நொடெகொப்பளு எனும் கிராமத்தை சுற்றி நடக்கிறது. மிகவும் இயல்பான, சமகால கிராம வாழ்க்கை முறையையும், சடங்குகளையும் பதிவுசெய்கிறது. அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் செஞ்சுரி கவுடா ரொம்ப பேமஸ். 101 வயது. ரொம்ப ஷோக்காக வாழ்ந்தவர். முதல்காட்சியில் தெரு முக்கில் உட்காந்து கொண்டு வருபவர் போவோரை கலாய்த்துக்கொண்டு இருப்பார். அப்படியே எழுந்து, சிறுநீர் கழிப்பதற்காக உட்காருபவர், மயக்கமடைந்து விழுவார். அப்படியே இறந்துவிடுகிறார். 100 வருஷத்துக்கு மேல வாழ்ந்தவர் என்பதால் அவரது இறப்பு சடங்கு கோலாகலமாக கொண்டாட ஊர் முடிவு செய்கிறது.

அவருக்கு மூன்று தலைமுறை மகன்கள் இருக்கிறார்கள். அவரது மகன், தாடிக்காரகவுடா தான்தோன்றியாக ஊர் சுற்றுபவர். எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்கிறார். தனது தந்தை செஞ்சுரி கவுடா மேல் கோவம். அதுக்கான நியாயமான காரணம் ஒருமுறை சொல்கிறார்.

செஞ்சுரி கவுடாவோட பேரன், திம்மண்ணா, குடும்பஸ்தர். தனது தாத்தா இறந்தபிறகு தன்னுடைய பூர்வீக சொத்து தனது சித்தப்பா வகையறாக்களால் பிடுங்கிக்கொள்ளப்படும் என்ற பயத்தால் பூர்வீக சொத்தை யாரிடமாவது விற்று பணமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்.
ஆனா, அவரது அப்பா, கையெழுத்து போடுவதற்கு வரமாட்டேன் என்று வீம்பு பிடிக்கிறார். அதனால் தனது தந்தை இறந்துவிட்டதாக போலியாக ஒரு இறப்பு சான்றிதழ் தயாரித்து, பக்கத்து நகரத்தில் இருக்கும் ஒரு பணக்காரருக்கு நிலத்தை விற்க ஏற்பாடு செய்கிறார். தனது தந்தைக்கு பணம் கொடுத்து இந்தியா முழுக்க புண்ணியஸ்தல யாத்திரை போய்விட சொல்கிறார்.

செஞ்சுரி கவுடாவின் கொள்ளுப்பேரனும், திம்மண்ணாவின் மகனுமான அபி, விடலைப்பையன். கூட பசங்களோடு சேர்ந்துகொண்டு ஆற்றுமண் எடுத்து விற்பது, சட்டவிரோதமாக மரம் வெட்டுவது என திரிந்துகொண்டிருப்பவன். அந்த ஊருக்கு பக்கத்தில் முகாமிட்டிருக்கும் ஆட்டுமந்தையை மேய்ப்பவர்களின் பெண்ணை காதலிக்கிறான்.

செஞ்சுரி கவுடாவின் திதி அவர் இறந்து 11 நாள் கழித்து நடக்க திட்டமிடப்படுகிறது. அந்த 11 நாட்களில் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்த கதை. யாரையும் புனிதராக காட்டாமல் இயல்பான பலவீனங்களுடன் பதிவிட்டிருப்பது சிறப்பு. மேலும் காட்சிகள் எந்த சூழலிலும் ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தாமல், கிராமத்தில் நாம் கூடவே பயணிப்பது போன்ற மிக யதார்த்தமான அனுபவத்தை தருகிறது. மிகவும் ஷார்ப்பான வசனங்கள், சின்னச்சின்ன காட்சிகளின் டீடெயில்கள் படத்தை இன்னும் சுவாரசியமாக்குகிறது.

நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

https://www.youtube.com/watch?v=Q_NltD4Stv4

திரைப்படத்தில் குழந்தைகளும் போர்காலமும்


maxresdefault

உலக திரைப்படங்களில் போர்கால சூழலை அதன் அழிவை விவரிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய மதிப்பிருக்கிறது. இயக்குனர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இவற்றை ஆவணமாக பதிவு செய்திருப்பார்கள். நிறைய குறிப்பிடத்தகுந்த படங்கள் இந்த வகைமையில் இருந்தாலும் சில படங்கள் சாகாவரம் பெற்றவை. அவற்றில் போர்கால சூழ்நிலையை ஒரு குழந்தையில் பார்வையில், புரிதலில் சொல்லும் படங்கள் அதிக நெகிழ்ச்சியையும், மனபாரத்தையும் ஏற்படுத்துபவை. இந்த வகை படங்களை யோசிக்கும் போது எனக்கு சட்டென நினைவுக்கு வரும் படங்கள் விட்டோரிய டி சிகாவில் Bi Cycle Thieves (1948), ராபர்ட்டோ பெனிக்னியின் Life is Beautiful (1997), குயுல்லர்மோ டெல்டோராவின் Pan’s Labyrinth (2006). இந்த படங்கள் மறக்கவே முடியாத அனுபவத்தை தந்துள்ளன.

அதே போல Schindler’s List (1993) படத்தின் ஒரு காட்சியில் 4 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை சுற்றிலும் நாஜி படைகளால் மக்கள் சுட்டு சாகடிக்கும் சூழலில் தனியாக நடந்து சென்று, யாருமற்ற வீட்டில் கட்டிலுக்கு கீழ் சின்ன சிரிப்புடன் பதுங்கிக்கொள்வதும், பிறகு வேறொரு காட்சியில் அந்த குழந்தை சாகடிக்கப்பட்டு வண்டியில் கொண்டுசெல்லப்படுவதும் காட்டப்படும். இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்த படத்தை முழுவதும் ப்ளாக் அன்ட் வொயிட்டில் எடுத்திருப்பார். ஆனால் குறிப்பிட்ட அந்த பெண் குழந்தையை மட்டும் சிகப்பு உடையுடன் காண்பித்திருப்பார். பார்ப்பவரின் மனதை கரையச்செய்யும் காட்சி அது. எப்போது இந்த காட்சியை பார்த்தாலும் போர் குறித்த அந்த குழந்தையின் அறியாமையும், சமூக அவலத்துக்கு அவர் பலியாவதும் என்னை அழசெய்யும். (தமிழில் இதுபோன்ற படமாக கன்னத்தில் முத்தமிட்டால் முயற்சிக்கப்பட்டது. ஆனா, வழமையான மணிரத்தின மேதைமையினால் கதையின் அடிப்படை கரு சிதைந்து, அழகியல் துருத்திக்கொண்டது.)

இந்த வகை படங்களின் உச்சம் என Grave of the Fireflies (1988) படத்தை சொல்லலாம். ஹிஷோ டகஹாட்டா இயக்கிய ஜப்பானிய படமான இது அனிமேஷன் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அண்ணன், தங்கை ஆகியோர் போரினால் தனித்துவிடப்படுகின்றனர். அண்ணனுக்கு 14 வயதிருக்கும். தங்கைக்கு 4 வயதிருக்கும். இவர்கள் இருவருக்குமே போர் சூழல், அதன் தாக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளமுடியவில்லை. கடைசியில் போரின் மிகக்கோர விளைவுகளால் அவர்கள் இருவரும் இறந்து போவார்கள். மிக அழுத்தமான காட்சிகளால் நிரம்பிய படம். எனக்கு மிகவும் பிடித்த ஆனால் இன்னொறுமுறை பார்க்க விரும்பாத படம் என இந்த படத்தை குறிப்பிடுவேன். பார்க்கும் போது பல இடங்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதிகாரம், ஆட்சியாளர்களின் ஈகோவினால் நிகழ்ந்த போர்களால் அந்த போட்டியில் எந்த தொடர்பும் இல்லாத எத்தனை எத்தனை எளிய மக்கள் விட்டில் பூச்சிகளை போல மடிகிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

இந்த வகை படங்களை பெரிய அளவில் மக்கள் பார்க்கவேண்டும். அப்போது இயல்பாகவே மிருக குணம் குறைந்து அன்பு பெருக்கெடுக்கலாம். சகமனிதத்தை போற்றவும் வார்த்தெடுக்கவும் இந்த வகை படங்கள் மிகப்பெரிய கருவியாய் இருக்கக்கூடும்.

Whiplash (2014)


f

எங்க ஆபிஸில் ஒருத்தர் இருக்கார். சீனியர். அவருடன் சில ப்ராஜெக்ட்களில் நான் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கேன். அவரோட ஒர்க் பண்ணும் போதெல்லாம் எனக்கு அவர் மீது கோபமாகவும், பயமாகவும் இருக்கும். யாரு என்னன்னுல்லாம் பாக்கமாட்டார். கண்டபடி திட்டுவார். ஒவ்வொன்னுலயும் குறை கண்டுபிடிச்சி கடுப்ப கிளப்புவார். எப்படா அந்த வேலைகள் முடியும்ன்னு நான் காத்துக்கிட்டு இருப்பேன். ஆனா, மொத்தமா என்னுடைய கடந்த 13 வருட வேலையை நினைச்சிப்பாத்தா, என்னுடைய பெஸ்ட் லேர்னிங் அவருடன் இருந்த காலத்தில் தான் அமைந்திருக்கிறது.

சில பேர் இப்படித்தான். மத்தவங்க மேல கம்பாஷனே இல்லாம, கடுந்தோலுடன் மனசு முழுக்க பேரன்புடன் செயல்படுவார்கள். அன்பு எப்படி கோபமாக, மற்றவர் மனதை காயப்படுத்துவதாக வெளிப்படும்? இந்த படத்தில் வெளிப்பட்டிருக்கு. J.K.Simmons, மொட்டத்தல ப்ளெட்சராக நடித்திருக்கும் இந்த படம் க்ளாசிகல் மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்த படத்தை பாத்தாலும் இப்பவும் தலைக்குள்ள ட்ரஸ் சத்தமும், ப்ளெட்சருடைய திட்டும் கேட்டுக்கிட்டே இருக்கு.

டிரம்ஸ் இசையில் மிகப்பெரிய சாதனை செய்யனும்னு நினைக்கும் ஆன்ட்ரூவிடம் இருந்து தி பெஸ்ட்டை வெளிப்படுத்த ப்ளெட்சர் கையாளும் முறை நிஜமாவே டரியலாக்குகிறது. அந்த கடைசி சீனில் ஆன்ட்ரூ தன்னோட பெஸ்ட்டை கொடுக்கும் போது ஒரு புன்னகையும், வெற்றிபெற்ற களிப்பும் கலந்து ப்ளெட்சர் ஸ்மைல் பண்ணுவாரு. அங்கயே படம் ஓவர்.

முதல் காட்சியில் டபுல் பீட் வாசிக்கச் செய்யும் அவரது கம்பீரமான என்ட்ரி, ரிகர்சல் போது தப்பா வாசிக்கறவன கண்டுபுடிக்கும் முறை, எதிர்பாக்கும் டெம்போ வரலைன்னு மூனு பேரை மாத்தி மாத்தி ட்ரம்ஸ் வாசிக்கச் செய்யும் மரண பிடிவாதம், அந்த ஹோட்டலில் சார்லி பார்க்கர் பத்தி பேசும் பேஷன், கடைசி கம்போஷன் என சிம்மன்ஸ் அதகளம் பண்ணியிருப்பார். ஆன்ட்ரூ வாக நடித்த மைல்ஸ் டெல்லரும் அன்டர் ப்ளே செய்து, கடைசியில் விஸ்வரூபம் எடுப்பது அற்புதமாக இருந்தது.

Must watch musical drama.

சேரன் எனும் இயக்குனரின் படைப்புலகம்


jk_2334770f

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் 90களில் இறுதியில் நுழைந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தை பிடித்தவர். அவர் இயக்கிய எல்லா படங்கள் சமூக பொறுப்புணர்வுடன் நம்பிக்கையை விதைக்கும் தன்மையுடைய மெலோட்ராமா வகையை சார்ந்தவை. சாதி பிரச்சனை பற்றி பாரதி கண்ணம்மா, மாற்றுத்திறனாளிகள் குறித்த பொற்காலம், தற்கால அரசியல் குறித்த தேசிய கீதம், வெளிநாட்டு வேலை மோகம் குறித்த வெற்றிக்கொடி கட்டு, வரட்டு குடும்ப கவுரவம் குறித்த பாண்டவர் பூமி என அவர் ஆரம்பத்தில் எடுத்த ஐந்து படங்களுமே சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக, ரசிக்கத்தகுந்த வகையில் சொன்னவை. (வடிவேலு – பார்த்திபன் காம்பினேஷன் மறக்கவே முடியாது) இந்த ஐந்து படங்களுமே கிராம பின்னணியில் அமைந்திருந்தது குறிப்பிடப்படவேண்டியது.

கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்த இன்னிங்ஸில் சேரன் பயோகிராபி சார்ந்த படங்களை செய்யத்துவங்கினார். இவரது ஆட்டோகிராப் படம், ஒரு இளைஞனின் வாழ்வில் பல கட்டங்களில் சந்தித்த காதலை சுவாரசியமாக சொன்னது. இதிலும் பெண் கல்வி, ஜாதிய அடக்குமுறை என பல சமூக அவலங்கள் பதியப்பட்டாலும் ஒருவித ஆணாதிக்க பாவத்துடன் இந்த படம் இருப்பதாக குறை சொல்லப்பட்டது. அதையும் தாண்டி இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்து இவர் இயக்கிய தவமாய் தவமிருந்து எனக்கு மிக முக்கிய படமாக இருந்தது. இதுவும் பயோகிராபி வகை தான். தந்தையின் அன்பை, தியாகத்தை விரிவாக சொன்ன படங்கள் தமிழில் மிகக்குறைவு. இந்த படத்தில் ராஜ்கிரண் பாத்திரம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் எப்பவும் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய, உணர்வெழுச்சி சார்ந்த திரைப்படமாக இருக்கிறது. இதற்கு பிறகு அவர் இளைஞர்களின் நகர வாழ்க்கை, ஆடம்ப மோகம் குறித்து இயக்கிய மாயக்கண்ணாடி, மத ரீதியான வேறுபாடுகளினால் காதலர்கள் பிரிந்து போயிருந்தாலும் அவர்களின் நினைவுகளில் அன்பு அப்படியே மாறாமல் இருந்தது குறித்து பேசிய பொக்கிஷம் படம் என பயோகிராபி வகை படங்கள் சேரனிடம் இருந்து வெளிப்பட்டன.

இயக்குனர் சேரன் மீது எனக்கு பெரிய மரியாதை இருந்தாலும் அவரை நடிகராக எனக்கு பிடிக்கவில்லை. பாக்கியராஜ், ராஜேந்தர்.டி போல வெகு சில நபர்களே இயக்குனராகவும் கதாநாயகனாகவும் பெரிய வெற்றியும் மக்கள் அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இவர் உணராதது நமக்குத் தான் இழப்பு. சுமார் 10 படங்களில் இவர் நடித்திருந்தாலும் இயக்குனர் சூர்யா, சுந்தர்.சி, பார்த்திபன் வரிசையில் இவரும் நடித்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தால் பல நல்ல படங்களை மொக்கையாக்கியிருக்கின்றார். ஆனா, ஆட்டோகிராப் படம் எக்செப்ஷனல். அந்த படத்தில் ஒருவித நம்பகத்தன்மை தேவைப்பட்டது. நன்கு அறிமுகமான நடிகர்கள் நடிப்பதற்கு பதில் இவரே கதாநாயகான நடித்ததால் வெற்றிபெற முடிந்தது. அதே சமயம், இவர் கதாநாயகனாக நடித்ததால் மட்டுமே மாயக்கண்ணாடியும், பொக்கிஷமும் உள்ளிட்ட வேறு பல நல்ல கதைகளன் இருந்த படங்களும் தோற்றுப்போனது.

மீண்டும் சுமார் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ஜெகே எனும் நண்பனின் கதை படத்தின் மூலம் சேரன் தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இதுவும் அவருக்கு மிகவும் பழக்கமான பயோகிராபி வகை படம் தான். இந்த படத்தில் நான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்திருப்பது மிகப்பெரிய ஆறுதல். இந்த படம் ஒருவித சென்டிமெண்ட் + எமோஷனலி பேக்ட் டிராமா. இவரது முந்தைய படங்களில் வெளிப்படும் “கடினமான தருணங்களில் வாழ்வின் மீதான நம்பிக்கை” இந்த படத்திலும் வலிமையாக வெளிப்படுகிறது. மிஷ்கின், வாசுதேவ் மேனன் போல பெரிய டெக்னிகல், திரை மொழி சார்ந்த பரிட்சார்த்த முயற்சிகள் இல்லை என்றாலும் சும்மா கேஷவலாக ரமணி சந்திரன் நாவல் படிப்பது போல இயல்பாக, உருத்தல் இல்லாமல் படத்துடன் பயணிக்க முடிகிறது.

வாழ்க்கையின் மீது பெரிய பொறுப்புகள் இல்லாத ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் சாலை விபத்தும், அதில் நண்பனின் மரணம், தனக்கு மூளையில் ஏற்படும் ரத்தகசிவால் அதிக வருடங்கள் உயிர் வாழ முடியாது என்பது தெரிந்ததும் தனது குடும்ப கடமைகளை அதற்குள் நிறைவேற்றுவது தான் கதை. இந்த கதையை முடித்த விதம் எனக்கு பிடித்திருந்தது. க்ளைமாக்ஸில் “இட்ஸ் மெடிக்கல் மிராகிள்” என்ற ஒரு வசனத்தை வைத்து கதாநாயகன் பிழைத்துவிட்டான் என்று முடித்திருக்க முடியும். இல்லைன்னா, அவன் சாவைதை பாசமலர் சிவாஜி போல “கைவீசம்மா… கைவீசு…” என்று அழுகாச்சியா முடிச்சிருக்கலாம். ஆனா, ஜென்டிலா தனது கடமையை முடித்த பிறகு பறவையைப் போல தனது குடும்பத்தை நண்பர்களை விட்டு பிரிந்து சென்றுவிடுவதாக காட்டியிருப்பது நல்லாயிருந்தது.

அதே போல கதாநாயகன் எடுக்கும் சின்னச்சின்ன வணிக முயற்சிகள், அந்த பேஸ்புக் தீமில் அமைந்த பாடலின் க்ராபிக்ஸ், காதலியாக இல்லாமல் தோழியாக மட்டுமே நித்யா மேனனை காட்டியது பாராட்டப்படவேண்டிய விஷயம். நிச்சயம் படத்தை பார்க்கும் போது ரொம்ப பாசிட்டிவாக, வாழ்வின் நம்பிக்கையை உணரமுடியும். ஆனா, இந்த படத்தில் தனக்கு தெரிந்த வித்தை எல்லாத்தையும் மொத்தமா இறக்கனும்ன்னு படத்தின் மையநீரோட்டத்துக்கு தேவையே இல்லாத எக்கச்சக்க காட்சிகள், சேரனின் முந்தைய படக்காட்சிகளை ஞாபகப்படுத்தும் சீன்கள், அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பாட்டு போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். அதே போல மடத்தனமாக சம்மந்தமே இல்லாமல் கமெண்ட் அடித்திருக்கும் சந்தானம் சுத்தமா இந்த படத்தின் உணர்வுக்கு செட்டே ஆகவில்லை.

ஒட்டு மொத்தமாக 50 ரூபாய்க்கு மனதை தப்பா யோசிக்கச்செய்யாத, இயல்பாக ரெண்டு மணி நேரத்தை நல்லியல்புடன் எங்கேஞ் செய்யும் இந்த படத்துக்காக மேல சொன்ன சின்னச்சின்ன தவறுகளை நிச்சயம் சகித்துக்கொள்ளலாம்.

நன்றி சேரன். தொடர்ந்து இயக்குனராக மட்டும் இயங்குங்கள்.

Nightcrawler (2014) இரவுபுழுக்கள்


awards_fwa_scre-Y0YE (1)

உங்களில் நிறைய பேருக்கு நியூஸ் ரிப்போர்ட்டர்கள் சந்திக்கும் “கெவின் கார்ட்டர்” டயலமா தெரிந்திருக்கலாம். கெவின் கார்ட்டர் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடும் போது புகைப்படங்களை பிடித்து அது குறித்த செய்திகளை வெளிஉலகுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது “சாகும் தருவாயில் இருந்த ஒரு குழந்தை, அந்த குழந்தை செத்தால் அதை சாப்பிட குழந்தை அருகே காத்திருக்கும் வல்லுறு” இதனை புகைப்படமாக பிடித்து கார்ட்டர் உலகுக்கு வெளியிட்ட போது உலகமே பசிக்கொடுமையின் உச்சத்தை உணர்ந்தது. அந்த புகைப்படத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. அதே சமயம் சாகக்கிடக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் அதனை படம் பிடிக்க கேமரா லென்ஸை அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்த கார்ட்டரை மனுஷனா நீ என்று நிறைய பேர் காய்ச்சி எடுத்தனர். பரிசு கிடைத்த மூன்று மாதத்துக்குள் அந்த கான்ஃப்ளிக்ட் தந்த மன அழுத்தம் தாங்காமல் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு 33 வயது.

யாராவது செத்தாத் தான் வருமானம் என்ற நிலையில் வாழும் வெட்டியான்கள் போல நியூஸ் ரிப்போர்டர்களின்  பேரிடர், துக்கசம்பவத்துக்கு காத்திருக்கும் வாழ்க்கைமுறையை விவரித்த படங்களில் இந்த படம் மிகமுக்கிமானது எனலாம். டிவி செய்தி சானல்களில் சென்சேஷனல் நியூஸ் பிடித்து, அதனை வைத்து சேனல் ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்வதில் இருக்கும் குரூரமான சுயநலத்தை உண்மைக்கு அருகில் படம் பிடித்துக்காட்டுகிறது.

இந்த படத்தின் சுவாரசியமே இதில் வில்லன் என்று யாரும் இல்லை. அனைவரும் சூழ்நிலைக் கைதிகள். ஒருவகையில் இந்த படத்தில் வில்லனாக குற்றச்சம்பங்களை ரத்தமும் சதையுமாக டிவியில் பார்க்கவிரும்பும், அதை குறித்து பயம் கொள்ளும்  சமூக மனநிலையை சொல்லலாம். திருட்டுத்தொழிலில் எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் லு ப்ளும் நகரத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை வீடியோ படமெடுத்து டிவி சானல்களுக்கு விற்கும் ஃப்ரிலான்ஸ் நியூஸ் ரிப்போர்டராக மாறுகிறான். அவன் படிப்படியாக சுவாரசியமாக, திட்டமிட்ட க்ரைம் செய்திகளை தரும் எக்ஸ்பெர்ட்டாக மாறி, தனக்கான தனி செய்தி நிறுவனத்தையே நிர்மாணிப்பதே கதை.

முதலில் ஆக்சிடெண்டில் அடிபட்ட நபரின் கோரமான சிதைந்த முகத்தை ரொம்ப க்ளோசப்பில் படம் பிடித்து அதனை செய்தி சானலில் பகிர்ந்துகொள்வதன் மூலம் கவனம் பெறும் லு ப்ளும், தொடர்ச்சியாக அடுத்தடுத்து செய்தி சானல்களில் சுவாரசியமான நியூசை பகிர்ந்து கொள்ள தானே திட்டமிட்டு செய்திகளை ஜெனரேட் செய்யும் தந்திரம், நல்ல கொலை, ஆக்ஸிடெண்ட், மரணம் இவற்றுக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் டிவி சேனல்கள் என அறப்பண்புகளை கொன்று பணத்தை சுற்றி இயங்கும் மீடியாவின் இயக்கத்தை பார்க்கும் போது சற்று பயம் ஏற்படுவது உண்மைதான்.

வீடியோவின் ப்ரேமுக்குள் அழகாக படம் பிடிக்கவேண்டும் என்பதற்காக ஆக்ஸிடெண்ட்டில் அடிபட்டவரை காப்பாற்று வதற்கு பதிலாக அவரை இழுத்து வந்து காருக்கு அடியில் போட்டு நல்ல சீனாக அமைத்து படம் பிடிப்பது, ஒரு வீட்டில் கொலை நடக்கப்போகிறது என்று தெரிந்தும் அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் முதல் ஆளாக அதனை டீடெயிலாக படம் பிடிப்பதில் காட்டும் கவனம், கொலைகாரர்கள் யார் என தெரிந்தும் அதனை போலிசிடம் மறைத்துவிட்டு பிறகு நல்ல மார்க்கெட் பகுதியில் போலிசுக்கும் கொலைகாரர்களுக்கும் சண்டையை செய்தியாக படம் பிடிக்க திட்டமிடுவது, தன்னுடைய சக பணியாளரையே டிவி நியூசுக்காக சாகவிடுவது என செய்தி சேகரிக்க, செய்தியை உருவாக்க லு ப்ளும் செய்யும் தகிடுதத்தங்கள் அவரை மிகப்பெரிய நியூஸ் ரிப்போர்டராக மாற்றி நிறுவனமாகவே மாற்றிவிடுகிறது. திடுடனாக வெற்றிபெற முடியாத லு ப்ளும், அதே விதமான தந்திரங்களினால் கௌரவமிக்க செய்தியாளராக மாறுவது நல்ல சடையர்.

மயக்குறு மகள்: பாப்பாவும் பலூலும்


f_n

போன சனிக்கிழமை மாலை கோயிலுக்கு போய்விட்டு வெளியே வந்தோம். கோயில் வாசலில் பலூன் விற்றுக்கொண்டிருந்தது. பார்த்ததும் தர்ஷிணி “ஐ… பலூல்… அப்பா எனக்கு பலூல் வாங்கித் தாங்க” என நச்சரிக்க ஆரம்பித்தாள். நான் வேணாம் என சொல்லியும் கேட்காமல் பலூன் வேண்டும் என அழத்தொடங்கினாள். சற்று கடுப்புடன் வாங்கிக் கொடுத்தேன். ஐந்து சின்னச்சின்ன பலூன்கள் ஒன்றாக கட்டப்பட்ட பலூன் கொத்து அது. டூ வீலரில் அதனை காற்றிலும் பறக்கவிடாமல், மற்றவர் மேல் பட்டு வெடித்துவிடாமல் வீட்டுக்கு கொண்டுவருவது சிரமமாக இருந்தது. வீட்டுக்கு வந்து சேர மணி 9 ஆகிவிட்டிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் அதை வைத்து விளையாட ஆரம்பித்தாள். அவள் தந்த அழுத்தத்தில் சில நிமிடங்களிலேயே அதில் இருந்த ஒரு பலூன் வெடித்துவிட்டது. எனக்கு கோபம். தர்ஷிணிக்கு ஒரு அடியை போட்டு, பலூனை பத்திரமா வச்சுக்கத்தெரியல? என்று திட்டி விட்டேன். தர்ஷிணி கையில் உடைந்த பலூனுடன் தலை குனிந்து உட்காந்திருந்தாள். கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.

நான் அவளை கவனிக்காமல், மற்ற வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். மனதில் தர்ஷிணியை அடித்து திட்டிவிட்டோமே என்ற கழிவிரக்கம் இருந்தாலும் அவளது பிடிவாதம் அந்த சமயத்தில் எரிச்சலைத் தான் தந்தது. பிறகு அரை மணி நேரம் போயிருக்கும். அது வரை தர்ஷிணி அவள் உட்காந்திருந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. தலை குனிந்தே இருந்தது.

நான் அவளுக்கு எதிரில் சேரில் உட்காந்த போது, அவள் “அப்பா…” என்று உடைந்த குரலில் கூப்பிட்டாள். “என்னடி?” என்ற போது “அப்பா.. பலூலுக்கு வலிக்கும். பலூலை தூங்க வையுங்க..” என்றாள். அவள் மீது எனக்கிருந்த கோபம் நீர்குமிழி போல உடைந்து “சரி பலூனை தா..” என்றதும் நான் இயல்பாக பேசுகிறேன் என்பதில் பாப்பா உற்சாகமாகி, என்னிடம் ஒட்டிக்கொண்டாள். “அப்பா.. ஒரு பலூல் வெடிச்சிருச்சில்ல.. அதனால எல்லா பலூலுக்கும் வலிக்கும். பலூலை பத்திரமா தூங்க வையுங்க. நாளைக்கு சரியாயிடும்… மருந்து கொடுத்து, ஷெல்பில் பத்திரமா தூங்க வையுங்க. அக்காவும் (அவளைத் தான்) தூங்கப்போறா.. பலூலும் தூங்கப்போகுது… குட் நைட் பலூல்” என்று விடாமல் பேசிக்கொண்டிருந்தாள்.

எனது கோபத்தை, அவள் மீது நான் காட்டிய தேவையற்ற வன்முறையை உடனே மறந்து, கோபம் கொண்ட என்னிடமே சரணடைந்த மகளெனும் தேவதையின் இக்னரன்சுடன் பொங்கிய அன்பினால் புனிதமடைந்த நான் அவளை அள்ளி எடுத்து உச்சி நுகர்ந்தேன்.