Whiplash (2014)


எங்க ஆபிஸில் ஒருத்தர் இருக்கார். சீனியர். அவருடன் சில ப்ராஜெக்ட்களில் நான் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கேன். அவரோட ஒர்க் பண்ணும் போதெல்லாம் எனக்கு அவர் மீது கோபமாகவும், பயமாகவும் இருக்கும். யாரு என்னன்னுல்லாம் பாக்கமாட்டார். கண்டபடி திட்டுவார். ஒவ்வொன்னுலயும் குறை கண்டுபிடிச்சி கடுப்ப கிளப்புவார். எப்படா அந்த வேலைகள் முடியும்ன்னு நான் காத்துக்கிட்டு இருப்பேன். ஆனா, மொத்தமா என்னுடைய கடந்த 13 வருட வேலையை நினைச்சிப்பாத்தா, என்னுடைய பெஸ்ட் லேர்னிங் அவருடன் இருந்த காலத்தில் தான் அமைந்திருக்கிறது. … Continue reading

இரண்டு திரைப்படங்கள் (Ran & God Father)


Succession. அதிகாரத்தை அடுத்தத் தலைமுறைக்கு மாற்றியளித்தல். இந்த ஒரு செயல்பாடு தான் உலகின் பெரும்பாலான வரலாற்று சம்பவங்களுக்கு அடிப்படையாக இருந்துள்ளது, இருந்து வருகிறது, இருக்கும். குடும்ப அளவில் ஆரம்பித்து, நிறுவனங்களில், அரசு அமைப்புகளில், கட்சி சார்ந்த எல்லா நிலைகளிலும் ஒரு தலைமுறையின் தலைவர் தமது வயோதிக காலத்தில் அடுத்தத் தலைமுறைக்கு அதிகாரத்தை மாற்றித்தருவதில் தான் எல்லா பிரச்சனைகளும் அதிசயங்களும் நிகழ்கின்றன. சமீபத்தில் நான் யதேச்சையாக பார்த்த இரண்டு எதிர்எதிர் தன்மைகள் கொண்ட திரைப்படங்கள் அதையே ஞாபகப்படுத்தின. மேற்கத்திய … Continue reading

Dear Zindagi (2016)


சமீபத்தில் பார்த்த நல்ல, வாழ்க்கை மீது நம்பிக்கை தர வைக்கும், சிறந்த படம். ஷாருக்கான் தன்னுடைய அதிக ஆர்பாட்டமில்லாத நடிப்பில், ஆலியா பட் தனித்துவ நடிப்பில் மிரட்டியிருக்கும் படம். கதைக்களம் மிக எளிமையானது. ஹாலிவுட்டில் வெளிவந்த கராத்தே கிட் சீரிஸ் போன்றது. வாழ்வின் துவக்கத்தில் இருக்கும் ஒரு இளைஞர் மிகத் திறமையானவராக ஆனால் முன்கோபக்காரராக, யாரையும் மதிக்காதவராக, அடமென்ட்டாக இருப்பார். அவரை நல்வழிப்படுத்தி வாழ்வை கொண்டாடும் முறையை கற்றுக்கொடுக்க மியாகி போன்ற ஒரு குரு இருப்பார். இந்த … Continue reading

Tale of Tales (2016)


தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத ஜானராக ஃபேன்டசி படங்கள் இருக்கின்றன. நடைமுறையில் சாத்தியமாகாத கற்பனையை கனவு போல விரிக்கும், க்ரியேட்டரின் சுதந்திரத்துக்கு முழு வாய்ப்பளிக்கும் இந்த வகைப்படங்கள் தமிழில் பழிவாங்கும் படமாகவோ, குழந்தைகளுக்கான படமாகவோ தான் சுருங்கிவிட்டிருக்கிறது. முன்பு விட்டலாச்சார்யா, ராம.நாராயணன் போன்றவர்கள் ஒரே டெம்ப்ளேட்டில் இந்த படங்களை எடுத்துவந்தனர். சமகாலத்தில் சிம்புத் தேவன் இந்த வகை படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இதுவரை தமிழில் வெளிவந்த ஃபேன்டசி படங்களின் உச்சம் என செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை குறிப்பிடலாம். … Continue reading

Remember (2015)


முதியோர் காப்பகம். 90 வயது Zev Guttman ஒரு காலையில் கண் விழிப்பதுடன் படம் துவங்குகிறது. எழுந்ததும் தனது மனைவி தேடுகிறார். பிறகு அவர் தனது மனைவி சில நாட்களுக்கு முதுமையின் காரணமாக முன் இறந்துவிட்டார் என்று தெரிந்துகொள்கிறார். மேலும் Zev க்கு டிஸ்லெக்ஸியா எனும் மறதி வியாதி இருக்கிறது. சற்று நேரம் கண் அயர்ந்தாலும் சில விஷயங்களை மறந்துவிடுகிறார். விழித்தவுடன்திரும்பவும் தனது இறந்து போன மனைவி உயிருடன் இருப்பதாக நினைத்துத் தேட ஆரம்பிக்கிறார். வயோதிகம் காரணமாக … Continue reading

The bullet vanishes (மாயத் தோட்டா) 2012


சீனாவின் ஷங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களை திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான். முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பை சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்த பெண்ணின் … Continue reading

திதி (Thithi, Kannada, 2016)


லோகர்னோ ஃப்ளிம் பெஸ்டிவலில் இரண்டு கோல்டன் லியோபார்ட் விருது, சிறந்த கன்னட படத்துக்கான தேசியவிருது, ப்ரான்சிஸ் போர்ட் கொப்பலா, மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள் என க்ரெடிட் கொடுத்த படம், அனுராக் காஷ்யப் செமயா பாராட்டிய படம் என திதி எக்கச்சக்க வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. கதை, உத்தர கர்னாடகாவின் நொடெகொப்பளு எனும் கிராமத்தை சுற்றி நடக்கிறது. மிகவும் இயல்பான, சமகால கிராம வாழ்க்கை முறையையும், சடங்குகளையும் பதிவுசெய்கிறது. அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் செஞ்சுரி கவுடா ரொம்ப பேமஸ். 101 … Continue reading

Whiplash (2014)


எங்க ஆபிஸில் ஒருத்தர் இருக்கார். சீனியர். அவருடன் சில ப்ராஜெக்ட்களில் நான் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கேன். அவரோட ஒர்க் பண்ணும் போதெல்லாம் எனக்கு அவர் மீது கோபமாகவும், பயமாகவும் இருக்கும். யாரு என்னன்னுல்லாம் பாக்கமாட்டார். கண்டபடி திட்டுவார். ஒவ்வொன்னுலயும் குறை கண்டுபிடிச்சி கடுப்ப கிளப்புவார். எப்படா அந்த வேலைகள் முடியும்ன்னு நான் காத்துக்கிட்டு இருப்பேன். ஆனா, மொத்தமா என்னுடைய கடந்த 13 வருட வேலையை நினைச்சிப்பாத்தா, என்னுடைய பெஸ்ட் லேர்னிங் அவருடன் இருந்த காலத்தில் தான் அமைந்திருக்கிறது. … Continue reading

சேரன் எனும் இயக்குனரின் படைப்புலகம்


இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் 90களில் இறுதியில் நுழைந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தை பிடித்தவர். அவர் இயக்கிய எல்லா படங்கள் சமூக பொறுப்புணர்வுடன் நம்பிக்கையை விதைக்கும் தன்மையுடைய மெலோட்ராமா வகையை சார்ந்தவை. சாதி பிரச்சனை பற்றி பாரதி கண்ணம்மா, மாற்றுத்திறனாளிகள் குறித்த பொற்காலம், தற்கால அரசியல் குறித்த தேசிய கீதம், வெளிநாட்டு வேலை மோகம் குறித்த வெற்றிக்கொடி கட்டு, வரட்டு குடும்ப கவுரவம் குறித்த பாண்டவர் பூமி என அவர் ஆரம்பத்தில் எடுத்த ஐந்து படங்களுமே … Continue reading

Nightcrawler (2014) இரவுபுழுக்கள்


உங்களில் நிறைய பேருக்கு நியூஸ் ரிப்போர்ட்டர்கள் சந்திக்கும் “கெவின் கார்ட்டர்” டயலமா தெரிந்திருக்கலாம். கெவின் கார்ட்டர் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடும் போது புகைப்படங்களை பிடித்து அது குறித்த செய்திகளை வெளிஉலகுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது “சாகும் தருவாயில் இருந்த ஒரு குழந்தை, அந்த குழந்தை செத்தால் அதை சாப்பிட குழந்தை அருகே காத்திருக்கும் வல்லுறு” இதனை புகைப்படமாக பிடித்து கார்ட்டர் உலகுக்கு வெளியிட்ட போது உலகமே பசிக்கொடுமையின் உச்சத்தை உணர்ந்தது. அந்த புகைப்படத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. அதே … Continue reading