அவன் அன்பால் நிரம்பியவன். காற்றைப்போல ஒரு இடத்தில் நிற்காமல் அலைந்து திரிபவன். செல்லும் இடமெல்லாம் அன்பை கதிரியக்கமாய் வெளிப்படுத்துபவன். மற்றவருக்கு உதவுவதும், வாழ்க்கையை அன்பால் கொண்டாடுவதுமே அவனது செயல். இவன் இருந்து சென்ற இடங்களில் எல்லாம் அவள் தங்குகிறாள். அவனை நேரில்பார்க்கமுடியாவிட்டாலும் அவனது அன்பின் வீச்சை அவள் உணர்கிறாள். அவனை காதலிக்கவும் செய்கிறாள். அவனைத் தேடிய அவளது பயணம் திரிச்சூர் பூரம் திருவிழாவில் சங்கமிக்கிறது.
#Charlie (2015)
Malayalam
அவன் கடுங்கோபக்காரன். எடுத்ததெற்கெல்லாம் கோபப்படும், எரிச்சலாகும் இயல்புடையவன். அவனுக்கு காதல் ஏற்பட்டு திருமணமும் ஆகிறது. ஒரு தவிர்க்கக்கூடிய சூழலில் இவனது கோபத்தால் இரண்டு பேருக்கும் சண்டை ஏற்பட்டு அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தனது தவறை உணர்ந்த அவன், அவளை சமாதானப்படுத்தி காரில் தனது மாமனார் வீட்டுக்கு செல்கிறான். நல்லிரவில் ஒரு தாபாவில் சாப்பிட நேருகிறது. அந்த தாபாவின் சூழ்நிலையும், அங்கு நடக்கும் சம்பவங்களும் தப்பாகவே முடிகின்றன. அவனது முன்கோபமும் அந்த நிகழ்வுகளை இன்னும் வேகப்படுத்துகிறது. தனது முன் கோபத்துக்கான விலை என்ன என்பதை அவன் உணர்கிறான்.
#Kali (2016)
Malayalam
துல்கர் சல்மான், இரண்டு படங்களிலும் கதைநாயகன். கம்ப்லீட்டாக வேறு வகையாக கேரக்டர்கள். ஆனால் ஆர்பாட்டமில்லாத நடிப்பில் தன்னை நியாயப்படுத்துகிறார். முதல் படத்தில் நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உணர்வையும் இரண்டாம் படத்தில் நாம் இப்படி இருக்கவே கூடாது என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறார்.
மிக நல்ல படங்கள்.