எங்க ஆபிஸில் ஒருத்தர் இருக்கார். சீனியர். அவருடன் சில ப்ராஜெக்ட்களில் நான் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கேன். அவரோட ஒர்க் பண்ணும் போதெல்லாம் எனக்கு அவர் மீது கோபமாகவும், பயமாகவும் இருக்கும். யாரு என்னன்னுல்லாம் பாக்கமாட்டார். கண்டபடி திட்டுவார். ஒவ்வொன்னுலயும் குறை கண்டுபிடிச்சி கடுப்ப கிளப்புவார். எப்படா அந்த வேலைகள் முடியும்ன்னு நான் காத்துக்கிட்டு இருப்பேன். ஆனா, மொத்தமா என்னுடைய கடந்த 13 வருட வேலையை நினைச்சிப்பாத்தா, என்னுடைய பெஸ்ட் லேர்னிங் அவருடன் இருந்த காலத்தில் தான் அமைந்திருக்கிறது.
சில பேர் இப்படித்தான். மத்தவங்க மேல கம்பாஷனே இல்லாம, கடுந்தோலுடன் மனசு முழுக்க பேரன்புடன் செயல்படுவார்கள். அன்பு எப்படி கோபமாக, மற்றவர் மனதை காயப்படுத்துவதாக வெளிப்படும்? இந்த படத்தில் வெளிப்பட்டிருக்கு. J.K.Simmons, மொட்டத்தல ப்ளெட்சராக நடித்திருக்கும் இந்த படம் க்ளாசிகல் மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்த படத்தை பாத்தாலும் இப்பவும் தலைக்குள்ள ட்ரஸ் சத்தமும், ப்ளெட்சருடைய திட்டும் கேட்டுக்கிட்டே இருக்கு.
டிரம்ஸ் இசையில் மிகப்பெரிய சாதனை செய்யனும்னு நினைக்கும் ஆன்ட்ரூவிடம் இருந்து தி பெஸ்ட்டை வெளிப்படுத்த ப்ளெட்சர் கையாளும் முறை நிஜமாவே டரியலாக்குகிறது. அந்த கடைசி சீனில் ஆன்ட்ரூ தன்னோட பெஸ்ட்டை கொடுக்கும் போது ஒரு புன்னகையும், வெற்றிபெற்ற களிப்பும் கலந்து ப்ளெட்சர் ஸ்மைல் பண்ணுவாரு. அங்கயே படம் ஓவர்.
முதல் காட்சியில் டபுல் பீட் வாசிக்கச் செய்யும் அவரது கம்பீரமான என்ட்ரி, ரிகர்சல் போது தப்பா வாசிக்கறவன கண்டுபுடிக்கும் முறை, எதிர்பாக்கும் டெம்போ வரலைன்னு மூனு பேரை மாத்தி மாத்தி ட்ரம்ஸ் வாசிக்கச் செய்யும் மரண பிடிவாதம், அந்த ஹோட்டலில் சார்லி பார்க்கர் பத்தி பேசும் பேஷன், கடைசி கம்போஷன் என சிம்மன்ஸ் அதகளம் பண்ணியிருப்பார். ஆன்ட்ரூ வாக நடித்த மைல்ஸ் டெல்லரும் அன்டர் ப்ளே செய்து, கடைசியில் விஸ்வரூபம் எடுப்பது அற்புதமாக இருந்தது.
Must watch musical drama.