Tale of Tales (2016)


16507821_10211936277392646_6987425298351210917_n

தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத ஜானராக ஃபேன்டசி படங்கள் இருக்கின்றன.

நடைமுறையில் சாத்தியமாகாத கற்பனையை கனவு போல விரிக்கும், க்ரியேட்டரின் சுதந்திரத்துக்கு முழு வாய்ப்பளிக்கும் இந்த வகைப்படங்கள் தமிழில் பழிவாங்கும் படமாகவோ, குழந்தைகளுக்கான படமாகவோ தான் சுருங்கிவிட்டிருக்கிறது. முன்பு விட்டலாச்சார்யா, ராம.நாராயணன் போன்றவர்கள் ஒரே டெம்ப்ளேட்டில் இந்த படங்களை எடுத்துவந்தனர். சமகாலத்தில் சிம்புத் தேவன் இந்த வகை படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இதுவரை தமிழில் வெளிவந்த ஃபேன்டசி படங்களின் உச்சம் என செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை குறிப்பிடலாம். அந்த படத்தின் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் மிக முக்கிய படம்.

ஹாலிவுட்டில் மிக அதிகம் வெளிவரும ஜானராக ஃபேன்டசி படங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பத்துக்கு எட்டு படங்கள் குழந்தைகளுக்கான படங்கள். ரெண்டு படங்கள் பெரியவர்களுக்காக எடுக்கப்பட்டாலும் சிறப்பான படங்கள் எப்பவாவது ஒரு முறை தான் வரும். கடந்த வருடம் மேட்டியோ கர்ரோன் இயக்கத்தில் வெளிவந்த tale of tales திரைப்படம் அப்படி பூத்த குறிஞ்சி மலர். இதுக்கு முன்னாடி, மறக்கமுடியாத ஃபேன்டசி படம் என்றால், குல்லர்மோ டெல்டோராவுடைய Pan’s Labyrinth தான். அதற்கடுத்து இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.

17ம் நுற்றாண்டின் இத்தாலிய கவிஞர் Giambattista Basileடைய கதைத்தொகுப்பான Pentamaroneல் இருந்து மூன்று கதைகள் ஒன்றை ஒன்று பிணைக்கப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்த மூன்று கதைகளுமே அன்பின் இருண்மைபக்கத்தை பேசுகின்றன. அன்பு அளவுக்கு அதிகமாகும் போது ஏற்படும் சிக்கல்களையே முன்வைக்கிறது. கணவரின் உயிரை இழந்து பெற்ற தனது மகனின் மீது பேரன்பு வைக்கும் அரசி, தாய் இல்லாமல் தனது மகளை வளர்க்கும் இன்னொறு அரசன், அவர் ஒரு விசித்திர பூச்சியின் மீது வைக்கும் அன்பு அதனால் வரும் சிக்கல், வெளியுலகத்தையே காணாத இரண்டு வயோதிக சகோதரிகளின் அன்பு, அவர்களில் ஒருவர் இளமையுடன் திரும்பி அந்நாட்டு அரசனை மணம்முடிக்க மற்றொரு சகோதரி சந்திக்கும் பிரிவின் சிக்கல் என மூன்று கதைகளும் ஒன்றை ஒன்று முடிச்சுப்போட்டு நல்ல காட்சி அனுபவத்தை தருகின்றன.

படத்தின் லேண்ட்ஸ்கேப், காட்சிப்படிமங்கள், ஒளிப்பதிவு அதி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. சர்க்கஸ் கலைஞர்கள் மூன்று கதைகளிலும் வருகின்றனர். அதே போல மரணம் மூன்று கதைகளிலும் துரத்துகிறது. படத்தில் இடம்பெரும் மான்ஸ்டர்கள் ஒருவித மாய அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு தருகிறது.

இத்தாலியின் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற இயக்குனருக்கு இது முதல் ஹாலிவுட் படம். மிகச்சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் குறித்து பெரிய கவனம் ஏற்படாதது வியப்பளிக்கிறது.

மாற்றுசினிமா விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s