Remember (2015)


hh

முதியோர் காப்பகம். 90 வயது Zev Guttman ஒரு காலையில் கண் விழிப்பதுடன் படம் துவங்குகிறது. எழுந்ததும் தனது மனைவி தேடுகிறார். பிறகு அவர் தனது மனைவி சில நாட்களுக்கு முதுமையின் காரணமாக முன் இறந்துவிட்டார் என்று தெரிந்துகொள்கிறார். மேலும் Zev க்கு டிஸ்லெக்ஸியா எனும் மறதி வியாதி இருக்கிறது. சற்று நேரம் கண் அயர்ந்தாலும் சில விஷயங்களை மறந்துவிடுகிறார். விழித்தவுடன்திரும்பவும் தனது இறந்து போன மனைவி உயிருடன் இருப்பதாக நினைத்துத் தேட ஆரம்பிக்கிறார். வயோதிகம் காரணமாக தளர்வு, அயர்ச்சி ஆகியவையும் அவரை சிரமப்படுத்துகிறது.

அதே காப்பகத்தில் அவரது வயதை ஒத்த நண்பர் Max Rosenbaum இருக்கிறார். இவர், சுவாசக்கோளாரினால் அவதிபடுபவர். கால் ஊனமானவர். அவர் Zev Guttman ஐக் கூப்பிட்டு, அவர் முன்பு வாக்களித்திருந்த படி, தனது மனைவி இறந்தபிறகு செய்யவேண்டிய முக்கியமான பணி குறித்து ஞாபகப்படுத்துகிறார். அது குறித்த விரிவான கடிதத்தை Zev Guttmanனிடம் தருகிறார்.

இருவரும் யூதர்கள். ஜெர்மனியின் நாஜிப்படையினரால் சித்திரவதைக்கு ஆளானவர்கள். அந்த வன்கொடுமை கூடாரத்தில் தமது குடும்பங்களை இழந்தவர்கள். தமது குடும்பத்தை கொன்ற ஜெர்மனிய தளபதி, Otto Wallisch என்பவன் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்ற பிறகு தனது பெயரை Rudy Kurlander என மாற்றிக்கொண்டு, ஜெர்மானியரால் பாதிக்கப்பட்ட நபரைப்போல போலியான டாக்குமெண்ட்களுடன் Rudy Kurlander என்ற பெயரில் அமெரிக்கா – கனடாவில் புலம்பெயர்ந்திருப்பதாக கண்டுபிடிக்கிறார்.

அமெரிக்க – கனடா நாடுகளில் Rudy Kurlander என்ற பெயரில் நான்கு பேர் இருப்பதாக Max Rosenbaum கண்டுபிடிக்கிறார். அவர்களில் யார் Otto Wallisch என கண்டுபிடித்து கொன்று பழி தீர்ப்பதற்காக Zev பயணப்படுகிறார். அவருக்கு வேண்டிய லாஜிஸ்டிக் உதவிகளை முதியோர் இல்லத்தில் இருந்தபடியே Max செய்து கொடுக்கிறார். Zev, டிஸ்லெக்ஸியா வியாதியுடன் அவ்வப்போது தான் எதற்காக இந்த பயணத்தில் இருக்கிறோம் என்று மறந்துபோகும் வலியுடன் உண்மையான Otto Wallisch யார் என்பதை கண்டறியும் பயணமாக இந்த படம் விரிகிறது.

Zev Guttmanஆக Christopher Plummer நடித்திருப்பார். செம்மையான நடிப்பு. அவருக்கு உண்மையிலேயே 90 வயது என்பதால் அவரது இயல்பான இருப்பே படத்துக்கு தேவையான நியாயத்தை கொடுத்துவிடுகிறது. அமைதியான, அதே சமயம் அடுத்து என்ன என்று பரபரப்பை ஏற்படுத்தி பெரிய அதிர்வுடன் முடியும் அற்புத படம். கனடாவின் லேண்ட்ஸ்கேப்கள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன.

படத்தின் இறுதி காட்சி நமது நம்பிக்கை, அறம், சாதி மற்றும் மதம் சார்ந்த பெருமிதத்தின் அபத்தத்தை கேள்வி கேட்கக்கூடியது. படம் பார்த்து முடிக்கும் போது நமது ஞாபகங்களே மொத்த மனித சமூகத்தின் மிகப்பெரிய எதிரி என்பது புரிகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: