திதி (Thithi, Kannada, 2016)


லோகர்னோ ஃப்ளிம் பெஸ்டிவலில் இரண்டு கோல்டன் லியோபார்ட் விருது, சிறந்த கன்னட படத்துக்கான தேசியவிருது, ப்ரான்சிஸ் போர்ட் கொப்பலா, மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள் என க்ரெடிட் கொடுத்த படம், அனுராக் காஷ்யப் செமயா பாராட்டிய படம் என திதி எக்கச்சக்க வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.

கதை, உத்தர கர்னாடகாவின் நொடெகொப்பளு எனும் கிராமத்தை சுற்றி நடக்கிறது. மிகவும் இயல்பான, சமகால கிராம வாழ்க்கை முறையையும், சடங்குகளையும் பதிவுசெய்கிறது. அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் செஞ்சுரி கவுடா ரொம்ப பேமஸ். 101 வயது. ரொம்ப ஷோக்காக வாழ்ந்தவர். முதல்காட்சியில் தெரு முக்கில் உட்காந்து கொண்டு வருபவர் போவோரை கலாய்த்துக்கொண்டு இருப்பார். அப்படியே எழுந்து, சிறுநீர் கழிப்பதற்காக உட்காருபவர், மயக்கமடைந்து விழுவார். அப்படியே இறந்துவிடுகிறார். 100 வருஷத்துக்கு மேல வாழ்ந்தவர் என்பதால் அவரது இறப்பு சடங்கு கோலாகலமாக கொண்டாட ஊர் முடிவு செய்கிறது.

அவருக்கு மூன்று தலைமுறை மகன்கள் இருக்கிறார்கள். அவரது மகன், தாடிக்காரகவுடா தான்தோன்றியாக ஊர் சுற்றுபவர். எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்கிறார். தனது தந்தை செஞ்சுரி கவுடா மேல் கோவம். அதுக்கான நியாயமான காரணம் ஒருமுறை சொல்கிறார்.

செஞ்சுரி கவுடாவோட பேரன், திம்மண்ணா, குடும்பஸ்தர். தனது தாத்தா இறந்தபிறகு தன்னுடைய பூர்வீக சொத்து தனது சித்தப்பா வகையறாக்களால் பிடுங்கிக்கொள்ளப்படும் என்ற பயத்தால் பூர்வீக சொத்தை யாரிடமாவது விற்று பணமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்.
ஆனா, அவரது அப்பா, கையெழுத்து போடுவதற்கு வரமாட்டேன் என்று வீம்பு பிடிக்கிறார். அதனால் தனது தந்தை இறந்துவிட்டதாக போலியாக ஒரு இறப்பு சான்றிதழ் தயாரித்து, பக்கத்து நகரத்தில் இருக்கும் ஒரு பணக்காரருக்கு நிலத்தை விற்க ஏற்பாடு செய்கிறார். தனது தந்தைக்கு பணம் கொடுத்து இந்தியா முழுக்க புண்ணியஸ்தல யாத்திரை போய்விட சொல்கிறார்.

செஞ்சுரி கவுடாவின் கொள்ளுப்பேரனும், திம்மண்ணாவின் மகனுமான அபி, விடலைப்பையன். கூட பசங்களோடு சேர்ந்துகொண்டு ஆற்றுமண் எடுத்து விற்பது, சட்டவிரோதமாக மரம் வெட்டுவது என திரிந்துகொண்டிருப்பவன். அந்த ஊருக்கு பக்கத்தில் முகாமிட்டிருக்கும் ஆட்டுமந்தையை மேய்ப்பவர்களின் பெண்ணை காதலிக்கிறான்.

செஞ்சுரி கவுடாவின் திதி அவர் இறந்து 11 நாள் கழித்து நடக்க திட்டமிடப்படுகிறது. அந்த 11 நாட்களில் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்த கதை. யாரையும் புனிதராக காட்டாமல் இயல்பான பலவீனங்களுடன் பதிவிட்டிருப்பது சிறப்பு. மேலும் காட்சிகள் எந்த சூழலிலும் ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தாமல், கிராமத்தில் நாம் கூடவே பயணிப்பது போன்ற மிக யதார்த்தமான அனுபவத்தை தருகிறது. மிகவும் ஷார்ப்பான வசனங்கள், சின்னச்சின்ன காட்சிகளின் டீடெயில்கள் படத்தை இன்னும் சுவாரசியமாக்குகிறது.

நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

https://www.youtube.com/watch?v=Q_NltD4Stv4

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: