Nightcrawler (2014) இரவுபுழுக்கள்


awards_fwa_scre-Y0YE (1)

உங்களில் நிறைய பேருக்கு நியூஸ் ரிப்போர்ட்டர்கள் சந்திக்கும் “கெவின் கார்ட்டர்” டயலமா தெரிந்திருக்கலாம். கெவின் கார்ட்டர் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடும் போது புகைப்படங்களை பிடித்து அது குறித்த செய்திகளை வெளிஉலகுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது “சாகும் தருவாயில் இருந்த ஒரு குழந்தை, அந்த குழந்தை செத்தால் அதை சாப்பிட குழந்தை அருகே காத்திருக்கும் வல்லுறு” இதனை புகைப்படமாக பிடித்து கார்ட்டர் உலகுக்கு வெளியிட்ட போது உலகமே பசிக்கொடுமையின் உச்சத்தை உணர்ந்தது. அந்த புகைப்படத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. அதே சமயம் சாகக்கிடக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் அதனை படம் பிடிக்க கேமரா லென்ஸை அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்த கார்ட்டரை மனுஷனா நீ என்று நிறைய பேர் காய்ச்சி எடுத்தனர். பரிசு கிடைத்த மூன்று மாதத்துக்குள் அந்த கான்ஃப்ளிக்ட் தந்த மன அழுத்தம் தாங்காமல் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு 33 வயது.

யாராவது செத்தாத் தான் வருமானம் என்ற நிலையில் வாழும் வெட்டியான்கள் போல நியூஸ் ரிப்போர்டர்களின்  பேரிடர், துக்கசம்பவத்துக்கு காத்திருக்கும் வாழ்க்கைமுறையை விவரித்த படங்களில் இந்த படம் மிகமுக்கிமானது எனலாம். டிவி செய்தி சானல்களில் சென்சேஷனல் நியூஸ் பிடித்து, அதனை வைத்து சேனல் ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்வதில் இருக்கும் குரூரமான சுயநலத்தை உண்மைக்கு அருகில் படம் பிடித்துக்காட்டுகிறது.

இந்த படத்தின் சுவாரசியமே இதில் வில்லன் என்று யாரும் இல்லை. அனைவரும் சூழ்நிலைக் கைதிகள். ஒருவகையில் இந்த படத்தில் வில்லனாக குற்றச்சம்பங்களை ரத்தமும் சதையுமாக டிவியில் பார்க்கவிரும்பும், அதை குறித்து பயம் கொள்ளும்  சமூக மனநிலையை சொல்லலாம். திருட்டுத்தொழிலில் எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் லு ப்ளும் நகரத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை வீடியோ படமெடுத்து டிவி சானல்களுக்கு விற்கும் ஃப்ரிலான்ஸ் நியூஸ் ரிப்போர்டராக மாறுகிறான். அவன் படிப்படியாக சுவாரசியமாக, திட்டமிட்ட க்ரைம் செய்திகளை தரும் எக்ஸ்பெர்ட்டாக மாறி, தனக்கான தனி செய்தி நிறுவனத்தையே நிர்மாணிப்பதே கதை.

முதலில் ஆக்சிடெண்டில் அடிபட்ட நபரின் கோரமான சிதைந்த முகத்தை ரொம்ப க்ளோசப்பில் படம் பிடித்து அதனை செய்தி சானலில் பகிர்ந்துகொள்வதன் மூலம் கவனம் பெறும் லு ப்ளும், தொடர்ச்சியாக அடுத்தடுத்து செய்தி சானல்களில் சுவாரசியமான நியூசை பகிர்ந்து கொள்ள தானே திட்டமிட்டு செய்திகளை ஜெனரேட் செய்யும் தந்திரம், நல்ல கொலை, ஆக்ஸிடெண்ட், மரணம் இவற்றுக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் டிவி சேனல்கள் என அறப்பண்புகளை கொன்று பணத்தை சுற்றி இயங்கும் மீடியாவின் இயக்கத்தை பார்க்கும் போது சற்று பயம் ஏற்படுவது உண்மைதான்.

வீடியோவின் ப்ரேமுக்குள் அழகாக படம் பிடிக்கவேண்டும் என்பதற்காக ஆக்ஸிடெண்ட்டில் அடிபட்டவரை காப்பாற்று வதற்கு பதிலாக அவரை இழுத்து வந்து காருக்கு அடியில் போட்டு நல்ல சீனாக அமைத்து படம் பிடிப்பது, ஒரு வீட்டில் கொலை நடக்கப்போகிறது என்று தெரிந்தும் அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் முதல் ஆளாக அதனை டீடெயிலாக படம் பிடிப்பதில் காட்டும் கவனம், கொலைகாரர்கள் யார் என தெரிந்தும் அதனை போலிசிடம் மறைத்துவிட்டு பிறகு நல்ல மார்க்கெட் பகுதியில் போலிசுக்கும் கொலைகாரர்களுக்கும் சண்டையை செய்தியாக படம் பிடிக்க திட்டமிடுவது, தன்னுடைய சக பணியாளரையே டிவி நியூசுக்காக சாகவிடுவது என செய்தி சேகரிக்க, செய்தியை உருவாக்க லு ப்ளும் செய்யும் தகிடுதத்தங்கள் அவரை மிகப்பெரிய நியூஸ் ரிப்போர்டராக மாற்றி நிறுவனமாகவே மாற்றிவிடுகிறது. திடுடனாக வெற்றிபெற முடியாத லு ப்ளும், அதே விதமான தந்திரங்களினால் கௌரவமிக்க செய்தியாளராக மாறுவது நல்ல சடையர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s