Comparativeஆ பிசிக்ஸ், கணிதம் படித்தவர்களிடையே logical reasoning வலிமையா இருக்கும். ஆனா, thinking processல் பிசிக்ஸ் படிச்சவங்களுக்கும் கணிதம் படிச்சவங்களுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. பிசிக்ஸ் படிச்சவங்க, நிகழ்வுகளை கவனிப்பாங்க. அதிலிருந்து ஹைபொதிஸிஸ் டிரைவ் பண்ணுவாங்க. அந்த ஹைபோதிஸிஸ உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள். ஆனா கணித பின்னணி இருப்பவர்கள் தாம் கவனிக்கும் விஷயங்களின் சாத்தியமாகக்கூடிய எல்லா விளைவுகளையும் ஒவ்வொன்றாக தமது மனசுக்குள் சிமுலேஷன் செய்து ஓட்டிப்பார்ப்பார்கள். ஒவ்வொன்றின் தவறு சரியும் மனசுக்குள் விரிந்து அதனடிப்படையில் இறுதி விளைவினை வரையறுப்பார்கள். கணிதத்தை நேசிப்பவருடைய மனசு + மூளை ஆய்வக லேபைப் போல வேலை செய்யும்.
இப்படி ரெண்டு ஜீனியஸ். ஒருத்தர் பிசிக்ஸ் ப்ரொபஸர் (யுக்கவா). இன்னொருத்தர் அவரது கல்லுரி கால ப்ரெண்ட் கணிதம் சொல்லித்தரும் பள்ளி ஆசிரியர் (இஷிகாமி). இந்த ரெண்டு பேருக்கும் நடக்கும் கேட் அன்ட் மவுஸ் கேம் தான் ஸஸ்பெக்ட் எக்ஸ். இந்த படத்துக்கு இன்னொறு ஸ்பெஷல் இருக்கு. மலையாளத்தில் மரண ஹிட் அடிச்ச த்ருஷ்யம் படத்தோட அடிப்படை கரு இந்த படத்தில் இருந்து துவங்குவதை படம் பார்க்கும் போது உணரமுடியும். நோ. நிச்சயம் இந்த படத்த பாத்து த்ரிஷ்யம் காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லக்கூடாது. அது மகாஅபத்தம். இந்த படத்துக்கு செய்யும் துரோகம். ஆனா, மெமண்டோவுக்கும் கஜினிக்கும் உள்ள தொடர்பு போல இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
கணவனை பிரிந்து தனது டீன்ஏஜ் வயது மகளுடன் வாழும் பெண். அப்பப்ப அவரது கணவன் வந்து அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து, பணம் பிடுங்கி செல்கிறான். ஒரு நாள் அது போன்ற தருணத்தில் அவனை இந்த பெண்ணும் அவரது மகளும் தற்செயலாக கொலை செய்து விடுறார்கள். பக்கத்து வீட்டில் தனிமையே துணையாக குடியிருக்கும் கணித ஆசிரியர் இஷிகாமி. அவருக்கு அந்த பெண்ணின் மீது ஒருவித அன்பு. அவர்களுக்கு உதவிசெய்ய ஆரம்பிக்கிறார். அந்த பிணத்தை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு சமாதானம் சொல்லி போலிஸ் வந்தால் எப்படி பதில் சொல்லவேண்டும் என்று பயிற்சி அளிக்கிறார். மறுபக்கம் போலிஸ் பிசிக்ஸ் ப்ரொபசரின் துணையுடன் இந்த கொலையினை துப்பறிய இறங்குகிறார்கள். (இவரோட இன்ரோ சீனே சூப்பர் ஸ்டார் அறிமுகம் போல அத்தன மிரட்டலாக அமைந்திருக்கும்).
யுக்கவாவுக்கும் இஷிகாமிக்கும் இடையிலான பழைய கால நட்பு, அதனை தாண்டி இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் போட்டு வாங்குவது, ஆகியவற்றை சார்ந்து நிகழும் உரையாடல்கள் ரொம்ப டைட்டா, க்ரிஸ்ப்பா ஆணியடிப்பது போல இறங்கும்.
ஒரு கொலை. அதில் தொடர்புடைய சில கதாபாத்திரங்கள். இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஆடியன்சுக்கு தண்ணி காட்டும் ஹிட்ச்காக் ஸ்டைலில் இந்த படம் இயங்குகிறது. ஆனா, இதனை வெறும் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் பார்க்கமுடியவில்லை. அதையும் தாண்டி தனது திறமைக்கு உரிய அங்கீகாரமின்மை, அன்புக்கு ஏங்கும் மனதின் ஏக்கம் ஆகியவை எந்த அளவுக்கு ஒருவரை ஆதிக்கம் செய்யும் என்பதை இயக்குனர் (ஹிரோஷி நிஷிதானி) அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
சினிமாடோக்ராபி க்ரிஸ்டல் தூய்மையுடன் இருக்கும். கடைசி சில காட்சிகளில் இந்த படம் முற்றிலும் வேறொரு தளத்துக்கு சென்றுவிடும். இதன் சுவாரசியத்துக்கும், ப்ரசென்டேஷனுக்கும், பேசுகின்ற முக்கிய பொருளுக்காகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.