எந்திரன்: சாரி ஷங்கர்


வீட்டுக்காரம்மாவோட தொந்தரவு தாங்காமல் நேற்று மாலை எந்திரன் போகவேண்டியிருந்தது. எங்க ஊரில் எந்திரன் ஃபீவர் ஒரு வாரத்துக்குள்ளேயே குறைஞ்சிடுச்சு. ஈவினிங் ஷோ, 50ரூபாய்க்கே கோல்டன் மினியில் டிக்கட் கிடைத்தது. (ஆனா, 20 நாள் கழித்தும், நான் மகான் அல்ல படத்துக்கு 60 ரூபாய் கொடுத்துப் போனேன்.)

படத்தில் ஷங்கர், ரஜினி, ரத்தினவேலு மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடினமான உழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. தமிழக தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியதில் நிச்சயம் எந்திரன் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஆனால் ஒரு படத்தின் உன்னதத்தன்மையை அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. அந்த வகையில் இராவணனுக்குப் பிறகு இந்த படமும் ஏமாற்றம் தான்.

பொதுவாக ஷங்கர் படம் திரையில் முதல்முறை பார்க்கும் போது, மிகப்பெரிய காட்சிவிருந்தாக அமைந்திருக்கும். ரசிகனை எதையும் யோசிக்கச்செய்யாமல், அடுத்தடுத்த காட்சியின் பிரம்மாண்டத்தில் கரைந்து போகச்செய்யும். பின்னால் கொஞ்சம் சாவகாசமாக யோசிக்கும் போது, அந்த காட்சியமைப்புகளின் அபத்தமும் லாஜிக்கில்லாத தன்மையும் தெரியவரும். எந்திரன் படத்தில் வரும் சிந்தனையற்ற ரோபோக்களாக ரசிகர்கள் இருந்தால் ஷங்கர் படத்தை வியந்து ரசிக்கமுடியும்.

இந்த படத்திலும் இதே போக்கு வலிமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்ப படத்தின் ஆதார சிக்கலை எடுத்துக்கொள்வோம். வசீகரன் உருவாக்கிய ரோபோ, உணர்வுகளைப் பெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசீகரனின் காதலி மீது, காதல் கொள்கிறது. இதன் தீவிரத்தை அறிந்த வசீகரன், ஒரு கட்டத்தில் அதனை அக்குவேறு ஆணி வேராக பிரித்து குப்பையில் வீசிவிடுகிறான். அதன் பின் கதையின் போக்குக்கு இந்த நிகழ்வு ஆதாரமாக அமைகிறது. இதை திரைக்கதையில் நியாயப்படுத்துவதில் தான் படத்தின் கலைப்பூர்வமான வெற்றி அமைந்திருக்கிறது.

உண்மையில் 10 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய ஒரு ரோபோவில், காதல் உணர்வு தோன்றி, தனக்கே ஆபத்தாகும் என்றால், அதற்கடுத்த காட்சியமைப்புகள் லாஜிக்காக

1.  தன்னுடைய காதலியின் மீதான மையலை, சகோதரி பாசமாக மாற்றும் கமேண்டை வசீகரன் சிட்டியின் உள்திணிப்பது

2.  முடியவில்லை என்றால், ஐஸ்வர்யா ஸ்கின்னுடன் இன்னொறு ரோபோவை உருவாக்கி ஜோடி சேர்ப்பது

3.  அதுவும் முடியவில்லை என்றால், மிக ஆபத்தான ரோபோ கருவியை கவனத்துடன் லேப்பிலேயே டிஸ்மேன்டில் செய்து, முழுமையாக செயலிழக்கச்செய்வது

ஆகிய 3 செயல்களுக்கான வாய்ப்புகள் தான் யதார்த்தத்தில் அமையும். இதை விட்டுவிட்டு, கட்டையால் கைகாலை உடைத்து, குப்பைத் தொட்டியில் குவிக்கும் அபத்தம், வசீகரன் என்ற கேரக்டரை பொறுப்பற்ற கேனைப்பையனாக ஆக்கிவிடுகிறது. அந்த ஸீனிலேயே, படத்தின் திரைக்கதை ஓசோன் ஓட்டையை விட பெரிய ஓட்டையுடன் வந்துவிடுகிறது.

அதே போல, சில சின்னச் சின்ன ஷாட்கள் காட்சிக்கட்டமைப்பை இல்லாஜிக்காக ஆக்கியிருப்பது படம் பார்க்கும் போதே தெரிந்தது.

ரயில் சண்டையின் போது, அடித்து வெளியே போடப்பட்ட ரோபோ, இல்லாத டிரான்ஸ்பார்மரில் கரண்ட் ஏற்றிக்கொண்டு, தண்டவாளத்தில் வேகமாக வரும்போது, ஒரு மாடு இருப்பதை பார்த்து, அடுத்த தண்டவாளத்துக்கு மாறும். அந்த நேரத்தில், ரோபோவுக்கு உணர்ச்சிகள் என்பது இல்லை என்றால், ஏன் மாட்டை காப்பாற்ற அடுத்த தண்டவாளத்துக்கு மாற முடியும்?

மனித உணர்ச்சிகள் பெற்றதன் அடையாளமாக, ரோபோ, பிரசவம் பார்க்கும் சீன் வைத்திருப்பார்கள். அந்த சீன் கூட, ரோபோவின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்குமே தவிர, அதில் மனித உணர்வை ரோபோ வெளிப்படுத்துவதாக காட்சியமைக்கப்பட்டிருக்காது. இந்த காட்சிக்கும்,  தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் காட்சிக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை.

கடைசியில், பல வடிவங்களில் உருமாறும் பவர் ரேஞ்சர்ஸ், காட்டூன் நெட்வொர்க் காட்சியமைப்புகளில், அவ்வளவு பெரிய உருவம் கட்டமைக்கும் அளவுக்கு, அத்தனை ரோபோட் பிரதிகள், பரேட் காட்சியில் காட்டப்படவில்லை. கடைசியில், வசீகரன் இந்த பிரச்சனையை எப்படி அறிவுப்பூர்வமாக தீர்ப்பான் என்று எதிர்பார்த்தால், சும்மா பொட்டிய தட்டிவிட்டு, செயலிழக்கச்செய்கிறான். இதையெல்லாம் நாங்க, அம்புலிமாமா புத்தகத்திலேயே படிச்சாச்சு ஷங்கர். மகா மொக்கை.

கடைசியில் படத்தை எப்படா முடிப்பாய்ங்கன்னு ஆயிடுச்சி. அப்புறம், கால்மணி நேரத்து மேல ஓடும் படைப்பாளிகளின் பட்டியல், அதில் 70% பேர், வெளிநாட்டுக்காரர்கள் என்றால், நான் கூட காசு கொடுத்து, கேமரூனை அசிஸ்டண்ட்டா வைச்சி எதாவது ஒரு படத்தை எடுத்து, உலக சாதனை செஞ்சேன், தமிழனுக்கு வாழ்நாள் பெருமை கொடுத்தேன்னு சொல்லிக்கலாம் போலயிருக்கு.

சாரி ஷங்கர். சயின்ஸ் ஃபிக்ஷன்ன்னா ஏலியன்ஸ், கால எந்திரம், ரோபோடிக்ஸ் எனும் இந்த 3 வெரைய்டியை மாத்தி மாத்தி துவைச்சு காயப்போட்டு ஹாலிவுட்டில் எடுத்திட்டிருக்காங்க.(இன்செப்ஷன் விதிவிலக்கு) நீங்க கொஞ்சம் வேறமாதிரி யோசிச்சிருக்கலாம். சரி விடுங்க சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். அப்புறம், எந்திரன்னு படத்தோட பெயரை தமிழில் வரிவிலக்குக்காக வைச்சிட்டு, படத்தில் எந்த ஒரு இடத்திலும் வசனத்தில் எந்திரன் என்று பயன்படுத்தவில்லையே? டைட்டிலை மக்கள் மனதில் ஸிங்க் பண்ண மட்டும் பாட்டில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது போன்ற, குறுக்குபுத்தி ரெட் சிப்பை, எப்ப உங்க மனதில் இருந்து மாற்றப்போகிறீர்கள்?

மற்றபடி, அடுத்தடுத்த காட்சிகள், உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் நீண்ட ஆய்வில் சொல்லியிருப்பது போல மகா மொக்கையாகவும், காலிப்பிளவரை படம் பார்ப்பவர் காதில் வைத்துவிடுவது போலவும் உள்ளது.

ஆனா, இந்த படத்திலும் ஊழலை ஒழிக்கறேன், நாட்டை திருத்துறேன்னு இறங்காம இருந்ததுக்கு ரொம்ப நன்றி.

20 thoughts on “எந்திரன்: சாரி ஷங்கர்

 1. சிந்தனையற்ற ரோபோக்களாக ரசிகர்கள் இருந்தால் ஷங்கர் படத்தை வியந்து ரசிக்கமுடியும்.

  மகா மொக்கையாகவும், காலிப்பிளவரை படம் பார்ப்பவர் காதில் வைத்துவிடுவது போலவும் உள்ளது.

  —————————

  மொத்தத்தில் தமிழ்நாட்டு ரசிகர்களின் தலையெழுத்தை பிட்டு வைத்தீர்கள்..

  1. உண்மை சாந்தி. தற்போது தமிழ் திரை உலகில் அமீர், சசிகுமார், வசந்தபாலன், ராம், சுசீந்திரன், பாண்டிராஜன், மிஷ்கின் என்று வரிசை கட்டி அற்புதமான இளம் இயக்குனர்கள் தமிழின் புதிய சூழலுக்கான படங்களை தந்து வரும் இந்த நிலையில், ஷங்கர், மணிரத்னம், ரவிக்குமார் போன்ற சினிமா வியாபாரிகளின் படங்கள் முக்கியதுவ படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

  1. நன்றிங்க. கண்டிப்பா ரஜினியோட பழைய வேகத்தை இந்த படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் பார்க்கமுடியுது. அவரை குறை சொல்ல முடியாது. ஆனா, கமல், ஷாருக் போன்ற பெரிய தலைகள் ரிஜெக்ட் பண்ண ஏகப்பட்ட டிங்கரிங் வேலையுள்ள கதையில் அவர் எப்படி நடிக்க ஒத்துக்கிட்டார்னு தான் ஆச்சரியமா இருக்கு. ரஜினி மட்டும் இல்லைன்னா, இந்த படத்துக்கு பெரிய சங்கு நிச்சயம்.

 2. வாங்கன்னே. ரொம்ப நாளா ஆள காணோம்.

  //முடியவில்லை என்றால், ஐஸ்வர்யா ஸ்கின்னுடன் இன்னொறு ரோபோவை உருவாக்கி ஜோடி சேர்ப்பது//

  நாங்களும் படம் பாக்கும்போதே இந்த கமெண்ட் அடிச்சோம்ல..

  1. நன்றி ரமேஷ். உங்களைப் போல நல்லா எழுதிக் கலக்கறவங்க நடுவில, நான் என்னத்தை பதிவெழுதுவது. எல்லாரையும் படிக்கவே டைம் இல்லை தலைவா.

   அப்ப உங்க வேவ் லெந்த்தும், என்னோடதும் ஒன்னா இருக்கு. பிளீஸ் நோட் திஸ் பாய்ண்ட் மிஸ்டர்.ஷங்கர்.

 3. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இருந்தாலும் உங்கள் விமர்சனம் சரியாக படத்தை அலசியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

  1. நன்றி ஜெயந்தி. எப்படியும் வரும் கிறிஸ்மஸ், புத்தாண்டு தினத்தில் சன் டிவி இந்த படத்தை போடுவாங்க. இப்ப எதாவது ப்ரீ டிக்கெட் கிடைச்சா, வீட்ல போர் அடிச்சா, கஷ்டத்தை இஷ்டப்பட்டு ஏத்துக்கும் பக்குவம் இருந்தா போய் பாருங்க.

 4. நீங்க சொல்லற மாதிரி லாஜிக் பார்த்தா, உலகத்தில் ஒரு சினிமா கூட எடுக்க முடியாது! இத எடுத்ததுக்கு சந்தொசபடனும் அதவிட்டுட்டு பெருசா வியாக்யானம் பேசதிங்கோ!

  1. நன்றி கஜேந்திர பெருமாள். நமக்கு பிடித்த இயக்குனர், நடிகர் என்ற எல்லைகளை தாண்டி, நடுநிலையுடன் படைப்பின் குறைகளை வெளிப்படையாக பேசுவோம். அப்போது தான் அடுத்த படைப்பு கொஞ்சம் கவனத்துடன் வெளி வரும். எல்லாவற்றையும் compramise செய்து கொண்டே போனால் நல்ல மாற்றம் வராது. தமிழில் சமீபத்தில் வெளி வந்த நான் மகான் அல்ல, பொல்லாதவன், பருத்தி வீரன், vinnaithandi வருவாயா போன்ற படங்கள் நேர்த்தியான, தெளிவான திரை கதையை கொண்டவை. ஹிந்தியில் த்ரீ idiots பீப்லே லைவ் தாரே ஜாமீன் பர் ஆங்கிலத்தில் எக்ஸாம், inseption போன்ற நிறைய படங்கள் குறை சொல்ல முடியாத திரை கதையை கொண்டுள்ளன. நம்ம தமிழ் டைரக்டர், பாக்யராஜ் படங்கள் கடை சுமார் தான் என்றாலும் திரைகதையில் சிறந்து விளங்கியவை. இதே வகையை சேர்ந்த bigger than life படமான ரமணா ரொம்ப சிறப்பான திரைகதையில் பின்னப்பட்டது.

   ஷங்கர் படங்களில் ஜெண்டில்மான் தவிர மற்ற எல்லா படங்களும் திரைகதையில் ஓட்டை இருப்பவை தான். சும்மா பாண்டசியை வைத்து தப்பித்து வருகிறார்.

 5. I too saw the movie sir …. i was disappointed particularly over the story of this film… as you said in the last half an hour we could enjoy the talent of Rajini its true. But over build up was given in media…
  I got an sms joke…

  What is the difference btwn the films INDIAN and ENDIRAN??????

  i hope u all know this….. just for fun can anybody reply?????

  1. நன்றி ராஜா. நீங்க சொல்வது போல படத்தின் அடிப்படை திரையாக்கம் லாஜிக்குடன் கட்டமைக்க படவில்லை. ரஜினி இல்லை என்றால் பெரிய டப்பாவாக இந்த படம் மாறி இருக்கும். //இந்தியன் ல இளைஞன் கிழவனா காட்டி இருப்பார். என்திரன்ல கிழவன் குமாரனா கடி இருப்பார்கள்// Am I right?

   1. Sir ROBO’ ve ippadinaa…… next 3 idiots remake by Shankar……..? what a highlight in this is world famous acting king VIJAY is going to act in this… he going to act in Amir Khan character….. Be aware sir you may get thousands of post for this film….

   2. அது மகா கொடுமையாத் தான் இருக்கும் ராஜா. அந்த மூனு இடியட்ஸ் யார் தெரியுமா. 1.படம் எடுத்த தயாரிப்பாளர், 2.படத்தைப் பார்க்கும் ரசிகர்கள், 3.படம் பற்றி பதிவெழுதப்போகும் ப்ளாக்கர்ஸ்.

 6. சங்கர்……சும்மா நார் நார்!! அய்யோ பாவம் சங்கர், பாய்ஸ் படத்துல பல்லிளிச்சப்பவே இந்த மாதிரியான எக்ஸ்பெரிமென்டேஷனையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு, ஏதோ ஊரை திருத்துறதுக்கு நாலு நல்லது சொல்ற அந்நியனையோ, இந்தியனையோ தூசு தட்டி ஒரு படம் எடுத்திருக்கலாம்! ஜானகிராமன் போனா போவுதுன்னு விட்டிருப்பார் போலிருக்கு?! விமர்சனம் கனக்கச்சிதம்ங்க……சும்மா நார் நாரா கிழிச்சி தூக்கிப்போட்டுட்டீங்க! சங்கரோட பில்டப்புக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேணும்!! படிச்சி நல்லா வயிறு வலிக்க சிரிச்சேங்க…..ரொம்ப நன்றி!
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

 7. சில படங்களை தவிர அவரது படத்தில் ப்ரமாண்டம் தான் இருக்கும்.ராஜினி இல்லையென்றால் இந்தளவுக்கு பேசப்பட்டு இருக்காது.நல்ல விமர்சனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s