ம.ம.உலகம் (பகுதி 3)


கிராமப்புறங்களில் இன்னும் சில குடும்பங்கள் பாரம்பரிய விதைகளை காலங்காலமாக பாதுகாத்து வருகின்றனர். தம்முடைய நிலத்தில் விளைந்த தானியங்களை நான்கு பங்குகளாக பிரித்து, அடுத்த வருட விதைக்காக ஒரு பங்கும், தமது உணவுக்காக ஒரு பங்கும்,  விவசாயத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்கும் எடுத்து வைத்து மீதமானதை விற்கும் பழக்கம் இன்றும் உள்ளது. விதைக்காக ஒதுக்கப்பட்ட தானியத்தை தனியாக ஒரு மண்குடுவையில் இட்டு, அதற்கு வெளிப்புறம் குளுமைக்காக செம்மண் பூசி, சுத்தமான இருட்டு அறையில் வருடம் முழுக்க பயபக்தியுடன் பாதுகாத்து வருவர். விதைத் தானியம் இருக்கும் அறை பூஜை அறையைவிட அதிக அக்கரையுடன் பராமரிக்கப்படும். சிறு வயதில் என்னுடைய தாத்தா வீட்டில் பார்த்ததாக ஞாபகம். அதற்க்குப் பிறகு எனது தந்தையோ நானோ விவசாயத்தில் ஈடுபடாததால் கடந்த 2 தலைமுறைகளாக அந்த களஞ்சிய அறை யாரும் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போயிருக்கிறது. ஏறக்குறைய நிறைய வீடுகளில் இந்த நிலைமைதான். விவசாயியின் மகன் அல்லது மகள் விவசாயியாவதை விரும்புவதில்லை. சென்னைக்குப் பக்கத்தில் ஸ்ரீபெரும்புதுர் பகுதியில் விவசாயம் முழுவதுமாக செத்துவிட்டது. வளமான விவசாய நிலத்தை தொழிற்சாலைகளுக்கு விற்றுவிட்டு விவசாயிகள் வாட்ச்மேன்களாகவும், சமையல்காரர்களாகவும், ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் மாறிய அவலம் மனிதனுடைய பேராசையின் விளைவு. அந்த பகுதியில் என்னுடைய சிறு வயதில் கூட்டங்கூட்டமாக சிவப்பு நிற அலகுடைய கொக்குகளை பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது எங்கு பார்த்தாலும் கான்கிரிட் கட்டமைப்புகள் அங்கிருந்த பல பறவை, சிறுபூச்சியினங்களின் சாமதிகளில் கட்டப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.

விவசாயத்திற்கான இளங்கலை முதுகலைப் படிப்பு படிப்பவர்கள் கூட விவசாய அதிகாரியாகவோ, அறைக்குள் நடத்தும் ஆராய்ச்சியாளராகவோ பணியாற்றத்தான் விரும்புகிறார்களே தவிர களத்தில் இறங்கி விவசாயம் செய்வதில் விருப்பம் காட்டுவதில்லை. விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயம் சார்ந்த இரண்டாம் நிலை சேவைகளுக்கு காலர் அழுக்காகாமல் வேலை செய்யநினைப்பதில் எந்த நியாயமும் இல்லை. இப்போதெல்லாம் விவசாயி கூட தாம் உற்பத்தி செய்யும் எல்லா விளைச்சளையும் விற்று விட்டு தனது உணவை கடைகளில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூர் நிதிவளம் வெளியே செல்வதுடன், சுயசார்புடன் இருந்த வாழ்க்கை வியாபாரியை சார்ந்தமையும் நிச்சயமற்றத் தன்மையை உண்டாக்குகிறது.

பலவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணங்களாக எட்வர்ட்வில்சன் எனும் அறிஞர் குடியேற்றம், வெளியிலிருந்து வரும் உயிரின வகைகள், சுற்றுப்புற மாசுபாடு, மக்கள்தொகைப்பெருக்கம், மிதமிஞ்சிய அறுவடை (HIPPO: Habitat destruction, Invasive species, Pollution, Over-Population, and Over-harvesting) ஆகிய 5 காரணங்களை முன்வைக்கிறார். இவை அனைத்தும் மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அழிந்து வரும் தாவர இனங்களை பாதுகாக்க 4C அணுகுமுறை என்ற ஒன்றை வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். பாதுகாப்பது, பயிரிடுவது, உட்கொள்வது மற்றும் சந்தைப்படுத்துவது (Conservation, Cultivation, Consumption & Commercialize) ஆகிய நான்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் போது குறிப்பிட்ட தாவர இனம் அழியாமல் காக்கமுடியும். இதற்கு அரசாங்கமோ துறை நிபுணர்களோ மட்டும் போராடினால் போதாது. பெருவாரியான மக்கள் பங்கெடுக்கவேண்டும். பல்லுயிர்ப் பாதுகாப்பை சமூகம் புரிந்து கொண்டாடினால் மட்டுமே இது சாத்தியப்படும்.

மகாபாரதத்தில் ஒரு கதை வரும். பாண்டவர்கள் ஏன் இந்த உலகம் இவ்வளவு பெரியதாக, பல வகைத் தாவரங்களை உள்ளடக்கியுள்ளது. கடவுளுக்கு அறிவில்லை என்று பேசிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்ட துரோணர், பாண்டவர்களிடம் காட்டுக்குச் சென்று மனித குலத்துக்கு பயன்படாத எதாவது ஒரு தாவரத்தை எடுத்து வரச்சொன்னாராம். பாண்டவர்கள் காட்டுக்குச்சென்று ஆய்ந்த போது எல்லா தாவரங்களும் எதாவது ஒரு வகையில் மனிதனுக்கு பயன் தரும் வகையில் உள்ளதை அறிந்தனர். வெறும்கையுடன் திரும்பி வந்து எல்லாத் தாவரங்களும் எதோ ஒரு வகையில்தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளதை தெரிவித்தனராம். நமது தலைமுறைக்கு காட்டுக்குச் சென்று பல வகை தாவரங்களை அறிந்து கொள்ளக்கூட வாய்ப்பில்லாமல் அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

ஒன்று மட்டும் நிச்சயம். தாவரங்களும் மற்ற உயிர்களும் மனிதன் இல்லாமல் வாழமுடியும். ஆனால் மனிதனால் தாவரங்களோ விலங்குகளோ இல்லாமல் வாழமுடியாது. இருக்கிற பூமியெல்லாம் காட்டைத் திருத்தி கட்டிடங்களாக எழுப்பி செங்கலையும் மணலையுமா நாம் தின்னப்போகிறோம்?

(இதுபற்றி உங்களுடைய கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். பிறகு தொடரும்)

6 thoughts on “ம.ம.உலகம் (பகுதி 3)

  1. ஆழமான கட்டுரை. நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். விதைகளை எல்லாம் அழித்துவிட்டு ஒரு முறை மட்டும் விளையும் விதைகளை பன்னாட்டு கம்பெனிகளிடம் வாங்கி மண்ணையும், நம்மையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

    1. உண்மை தான் ஜெயந்தி. சுற்றுச்சூழல் அழிவில் இருக்கும் அரசியல் நாம் நினைப்பதைவிட பயங்கரமானது. அடுத்த தலைமுறையை நினைத்தால் பயமாயிருக்கிறது. நன்றி.

  2. தங்கள் கூறியது நூறுக்கு நூறு உண்மை சார். என் தாத்தா ஒரு விவசாயி. ஆனால் அவர் காலம் பிறகு தற்பொழுது எதுவோமே இல்லை. என் மாமா அனைத்தையுமே வீத்துவிட்டு தற்பொழுது மற்றவர்களிடம் கை ஏந்துவது என் என்று தற்பொழுது விளங்குகிறது.

    1. எங்க ஊர் பக்கம், நிறைய கார் கம்பெனிகள் ஆரம்பிக்கிறாங்க. அவங்க 1000க்கணக்கான ஏக்கர் நிலங்களை மொத்தமா வளைச்சுப் போடுறாங்க. முன்னாடி சொந்தமா நிலம் வைத்து விவசாயம் செய்து, அதை வைத்து குடும்பத்தை நடத்திய எளிமையான விவசாயிகள் தங்களோட நிலங்களை பெரிய கார்பரேட் கம்பெனிகளுக்கு வித்துட்டு, அந்த கம்பெனியில 2000, 3000க்கு வாட்ச்மேன் வேலைக்கு போகிறார்கள். முன்பு நெல் பயிர் செய்து, தம்முடைய தேவைக்கு போக மிச்சத்தை வித்து நிம்மதியா இருந்தவங்க, இப்ப அரிசியை கிலோ 30 ரூபாய்க்கும் 40ரூபாய்க்கும் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s