மனிதனுக்கு மட்டுமா உலகம்?


வழக்கமாக அலுவலகத்துக்கு என்னுடைய ஆக்டிவா வண்டியில் சுமார் 15 கி.மீ திருத்தணி-சென்னை நெடுஞ்சாலையில் சென்று வருகிறேன். நான் செல்லும் சாலையில் சமீபகாலமாக பல கம்பெனிகள் முளைத்து வந்தாலும் இன்னும் விவசாயம் வளமாகவே நடைபெற்றுவருகிறது. காலை நேரத்தில் பசுமையான காற்றுடன் பயணம் செய்வது புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆனால் எனது எல்லா பயணத்தின் போதும் ஒரு சில பட்டாம்பூச்சிகள் வண்டியிலும் எனது கண்ணாடியிலும் மோதி இறக்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. பட்டாம்பூச்சி எனது வண்டியில் மோதும் சமயமெல்லாம் எனக்கு சிறு உறுத்தல் ஏற்படும். மனம் கவலைகொள்ளும். ஆனால் வேகமான பயணத்தில் அதெல்லாம் மறந்தும் போய்விடும். இப்போது அது தினசரி நடைபெறுவதால் அது பற்றி முன்பிருந்த அக்கரையும் கரைந்து போய் இயல்பாக வண்ணத்துப்பூச்சிகளின் மரணத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டேன்.

உலகத்தில் மனிதன் மட்டுமே தனக்கான தேவையைச்சார்ந்து உலகத்தை மாற்றியமைத்துக் கொள்கிறான். பிற உயிரினங்கள் மனிதனின் தேவைக்கான இடுபொருளாகவே கருதப்படுகிறது. முன்பு காடாக இருந்த இடத்தில் பாதுகாப்பாக இருந்த வண்ணத்துப்பூச்சி, இப்போது மனிதன் தன்னுடைய வசதிக்காக சாலைகள் செய்து வண்ணத்துப்பூச்சியின் உயிர் வாழ்வதற்கான உரிமை குறைத்துள்ளான்.

ஐக்கிய நாடுகள் சபையும் நடப்பு 2010ம் ஆண்டை பல்லுயிர் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளது. பல்லுயிர் பாதுகாப்பின் அடிப்படையே, உலகில் உள்ள எல்லா உயிரினத்துக்கும் தாம் உயிர்வாழ்வதற்கான உரிமை மனிதனுக்கிருப்பது போலவே முழுஅளவில் இருப்பதை மனிதன் உணர்ந்து கொள்ளவும் அதனைச் சார்ந்து பல்வகை சிறு உயிரினங்கள், தாவர வகைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதுமாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் வாக்கு உலகின் எல்லா உயிரினங்களையும் சமமாகவே பாவிக்கச் சொல்கிறது.

நாம் வாழும் பூமியில் உயிரினங்களின் வகைப்பாடு சிக்கல் மிகுந்தது. மனித அறிவால் அளவிடமுடியாதது. இதுவரை உலகில் 1.75 மில்லியன் தாவர மற்றும் விலங்கின வகைகள் கண்டறியப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளன. இதனைத்தாண்டி 10 மில்லியனுக்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கின வகைகள் மனிதனால் அறியப்படாமல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 40%மும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தில் 90%மும் தாவரங்களையும் பிற விலங்குகளையும் நம்பியுள்ளது. உலகில் உள்ள மொத்த உயிரினங்களில் 99.9%  உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். 16,119 வகை உயிரினங்கள் நமது தலைமுறையிலேயே அழிவை சந்திக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர். மொத்த உயிரினங்களில் 30% 2050க்குள் நமது உலகைவிட்டு மறைந்துவிடுமென கவலை தெரிவிக்கின்றனர்.

உலகில் பலவகை உயிரினங்கள் சிறப்புற வாழும் 25 உச்சப் பகுதிகளில் 8 ஆசியாவில் உள்ளது. அதில் 3 இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் வடகிழக்கு பகுதி, இமயமலைப் பகுதி, மேற்குதொடர்ச்சி மலைப் பகுதி ஆகிய 3 பகுதிகள் பல்வகை உயிரினங்களின் வாழ்விடமாகவும் பல அரிய தாவர மற்றும் விலங்குகளின் ஆதாரமாகவும் விளங்கிவருகிறது. கடல் வாழ் உயிரின மண்டலத்தில் தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதி உலகச் சிறப்பு வாய்ந்தது. துரதிருஷ்டவசமாக இவற்றின் முக்கியத்துவம் அறியாமலே நாம் இப்பகுதியில் வளர்ச்சிப்பணி செய்கிறோம் என்ற பெயரில் தற்காலிக தீர்வுகளுக்காக பெரிய சாலைகள், கட்டிடங்கள், துறைமுகங்கள் கட்டி நிரந்தர பிரச்சனைகளை உருவாக்கிக்கொள்கிறோம்.

உலகில் உள்ள எல்லா விலங்குகள் மற்றும் தாவர வகைகள் எதாவது ஒரு வகையில் பிணைப்பினைக் கொண்டுள்ளன. நமக்கெல்லாம் பள்ளிக்காலத்தில் படித்த தாவர-விலங்கு உயிரிகளின் உணவுச் சங்கிலி ஞாபகமிருக்கும். தேனிக்களின் துணையோடு இனப்பெருக்கம் செய்யும் தாவர வகைகள் மட்டும் 1 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தாவர வகைகள் மனிதனுக்கு பொருளாதார மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் முக்கியமானவை. தேனிக்களின் எண்ணிக்கை குறையும் போது இத்தாவரங்களும் அழியும் அபாயம் உள்ளது. (கடைசியாக நீங்கள் எப்போது தேன்கூடு பார்த்தீர்கள் என்று ஞாபகம் உள்ளதா?)

இப்போதெல்லாம் நகர்புறங்களில் குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செல்போன் டவர்களின் தொடர்ச்சியான சிக்னல்கள் குருவியினத்துக்கு எமனாகியுள்ளது. அரசுத் துறையான பி.எஸ்.என்.எல் தவிர மற்ற எந்த தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளும் வரையறுக்கப்பட்ட அலைவரிசை வலிமையளவைப் பின்பற்றுவதில்லை. இதனால் நமது தலைமுறையிலேயே குருவியினம் காணாமல் போகின்ற வாய்ப்பு அதிகமுள்ளது கவனிக்கப்பட வேண்டியது. மேலும்  முன்பு நாம் சாப்பிட்டது போக மிச்சமிருக்கும் உணவை சாப்பிட்டு உயிர்வாழ்ந்த பறவையினம் இப்போது நமது வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட பிளாஸ்டிக் பைகளினால், தனக்கான உணவை அறிந்துகொள்ளவே முடியாமல் பசியால் அழிந்துகொண்டிருக்கிறது. இது போக நமது நகரங்களின் எல்லா நீர்நிலைகளும் கட்டிடங்களாக மாறிவிட்டதால், குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் கூட பறவையினம் மாள்வதாக கருத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆக மனிதனின் ஒவ்வொறு அசைவும் உலகின் உயிர்சமநிலைக்கு எதிராகவே இருந்துவருவது மிகப் பெரிய சாபம்.

(தொடரும்)

Advertisements
Comments
12 Responses to “மனிதனுக்கு மட்டுமா உலகம்?”
 1. krpsenthil சொல்கிறார்:

  பல்லுயிர் பெருக்கம் உள்ள தண்டகாரண்யா காடுகளை கூறு போடும் மத்திய அரசு ..
  நமக்கு கேட்க வாக்கு இல்லை..
  கேட்பவனை தேசத்துரோகி என்கிறோம் …

  இத்தாலிக் காரர்களுக்கு இந்திய தேசத்தின் மேல் என்ன அக்கறை இருந்துவிடப் போகிறது ..

  நல்ல பதிவு .. தொடருங்கள் ..

 2. ஜானகிராமன் சொல்கிறார்:

  தண்டகாரண்யா காடுகளில் நடக்கும் பச்சை வேட்டையை நினைக்கும் போது கோபமாக இருக்கிறது செந்தில். இங்கு செத்த பிணத்திலும் அரசியல் பார்ப்பார்கள். ஒருமுறை down to earth இதழில் பிசா பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர், உங்கள் இந்தியா எப்படி எங்களை கட்டுப்படுத்த முடியும்? என்று வெள்ளந்தியாக கேட்ட மக்களின் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது.

  இது பற்றி இன்னும் 2 பாகங்கள் உள்ளன. அடுத்த இரண்டு நாளைக்கு பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

 3. ramesh சொல்கிறார்:

  //இப்போதெல்லாம் நகர்புறங்களில் குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.//

  விஜயோட குருவி படம் பார்த்து எல்லா குருவிங்களும் தூக்குல தொங்கிடுச்சுங்க

 4. ஜானகிராமன் சொல்கிறார்:

  என்னா கண்டுபிடிப்பு பாஸ்… சுறாவோட எண்ணிக்கை குறைஞ்சதுக்கும் இதே தான் காரணமா? ரமேசுக்கு ஒரு நோபல் பரிசு பார்சல்…

 5. நாடோடி சொல்கிறார்:

  உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள். முகவரி கீழே.

  http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_18.html

 6. jaghamani சொல்கிறார்:

  உயிரிகளின் உணவுச் சங்கிலி பகிர்வு பயனுள்ளது.. பாராட்டுக்கள்..

 7. சிறப்பான பகிர்வு… பாராட்டுக்கள்…
  இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…

  வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_18.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க… நன்றி ஐயா…

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   அன்பு தனபாலன். தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி. தாங்கள் தொடர்ந்து வலையுலகில் இயங்கிவரும் ஆர்வத்துக்கும், உழைப்புக்கும் எனது பாராட்டுக்கள். நிச்சயம் தங்களின் பதிவுகளை படிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: