ச்சே…


வழக்கமான பயணத்தில் ஒருமுறை கல்லுரி மாணவன் ஒருவரை சந்தித்தேன். அவர் போட்டிருந்த டீசட்டை எனது கவனத்தை கவர்ந்த்து. டீசட்டையில் சே-குவேரா. என்னுடைய ஆதர்சம். உற்சாகமாகி, “தம்பி உன்னுடைய சட்டையில் இருப்பவர் யாரென்று தெரியுமா” என்று கேட்டேன். அவர், “யா… அமேரிக்காவின் பிரபல பாப் பாடகர், பேரு… இருங்க சொல்றேன்” என்று ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தான். என் தலையில் இடியே விழுந்தது. இன்றைய இளைஞர்களின் சிக்கலே இதுதான். அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. தவறாக தெரிந்துகொள்வதும், அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதும் விரக்தியை தருகிறது. நான், “நீங்க சொல்ற அந்த பாப்பாடகர் பேரு சே-குவேரா, டைம் கிடைக்கறப்போ கூகிள்ல தேடிப்பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

நேற்று அவருடைய 83வது பிறந்த நாள். சாதாரண மருத்துவரை சமூகம் போராளியாக்கிய சரித்திரம் அவர். அவரைப் பற்றி சில நாட்களுக்கு முன் நண்பர், சகபதிவர் வினாயகம் முருகன், “ஒரு பயணம் – இரண்டு நண்பர்கள்” என்ற தலைப்பில் (http://nvmonline.blogspot.com/2010/06/blog-post_11.html) பதிவெழுதினார். ரசித்துப் படித்தேன். அதேபோல் நண்பர் செந்திலுடைய முகப்புப் படம் சே வைத் தாங்கியிருக்கும். பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கும். அவரைப் பற்றி நேற்று அவரது பிறந்தநாளின் போது எதாவது எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால், சகபதிவர்கள் யாராவது என்னைவிட விரிவாகவும் ஆழமாகவும் எழுதுவார்கள், படித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். எனக்கு தெரிந்து யாரும் எழுதியதாக தெரியவில்லை.

சே என்றால் தோழர் என்று பொருள்.  எளிமையானவர்கள் எல்லாருக்கும் நண்பனாக விளங்கியவர். கம்யூனிச தோழர்களின் கடவுள். அவரது ஆண்மையான உடல்மொழியும் அலட்சியமான பார்வையும் பிரம்மிப்பானது. வழக்கம் போல நாம் அவரது கொள்கைகளை மறந்து விட்டு, அவரின் படத்தை மட்டும் சந்தைப்படுத்தி வருகிறோம். (இப்போ, அமெரிக்காவில் கூட இவரது படம் போட்ட பொருட்கள் நல்லா விக்குதாம்)

சே வை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பகத்சிங் நினைவுக்கு வரும். பகத், சேவுக்கு கொஞ்சம் மூத்தவர். அவர் கொல்லப்படாமல் இருந்தால் சேவுடைய காலத்தில் வாழ்ந்திருப்பார். ஒரு வேளை, சே, இந்தியாவுக்கு வந்திருக்கலாம். ஒருவேளை நடந்திருந்தால் நமது இந்தியாவின் வரலாறு மாறியிருக்கும். ஆனால் வரலாற்றின் எல்லாச்சுவடுகளிலும் இது போன்ற மாவீரர்கள் தாம் கொண்ட கொள்கைக்காக, அராஜகத்துக்கு எதிராக போராடி கருணையில்லாமல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

“என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர் எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான் கொல்லப்படுவதை பற்றி கவனம் செலுத்தமாட்டேன்” சே சொன்ன வார்த்தைகளுக்கு இன்றும் உயிர் இருக்கத் தான் செய்கிறது.

சல்யூட் டூ சே…

Advertisements
Comments
9 Responses to “ச்சே…”
 1. வெற்றிக்கதிரவன் சொல்கிறார்:

  தனது பயணத்தில் சே, இந்தியாவிற்கு வந்து நேருவை சந்தித்திருக்கிறார் -:)

  -வெற்றிக்கதிரவன்

 2. jayanthi சொல்கிறார்:

  சேகுவேரா பற்றி நினைவே இனிக்கும்.

 3. ponsiva சொல்கிறார்:

  avaraipatri innum konjam virivaga eluthungal…………..

 4. ramesh சொல்கிறார்:

  arumaiyaana pathivu jaanaki

 5. krpsenthil சொல்கிறார்:

  வணக்கம் அண்ணே,
  சே பற்றி என்னால் எழுத முடியாது, காரணம் அவரின் ஆளுமை, இன்னமும் அவரைப் படித்துக் கொண்டிருக்கும் சாதாரண வாசகன் நான்..
  புரட்சி என்பதை வேறு வடிவில் எடுத்துச் செல்ல முடியுமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

  அப்படி நான் ஜெயித்தால் அது சே விற்கான என் சமர்ப்பணம் அதுதான். அவர் பிறந்த நாளில் நான் எதுவும் எழுதாமைக்கு அதுதான் காரணம்.

  அன்புடன்,
  செந்தில் .

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   நன்றி செந்தில். நான் இந்தப் பதிவை தொடங்கியபோது கூட இதை எழுத எனக்கு என்ன தகுதியிருக்கிறது என்ற கேள்விதான் என் முன் வந்தது. அதனாலேயே, என்னால் விரிவாக போக முடியவில்லை. வம்பயர் கடிக்கும் எல்லாரையும் இரத்தக்காட்டேரியாக்குவது போல், படிக்கும் அனைவரையும் வேகம் கொள்ளச்செய்யும் காந்தம் அவர்.

   //புரட்சி என்பதை வேறு வடிவில் எடுத்துச் செல்ல முடியுமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்// நீங்க நம்ம ஊர்ல புரட்சியே செய்யாம புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் ன்னு தானே பட்டமிட்ட தானைத் தலைவர்களை சொல்லலையே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: