நம்ம ஊர் – 25


 1. கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.
 2. காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.
 3. கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும்.
 4. ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க.
 5. சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர  செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும்.
 6. தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க.
 7. சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம்.
 8. நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம்.
 9. கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க.
 10. 50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள்.
 11. ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும்.
 12. செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள்.
 13. எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு.
 14. பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும்.
 15. கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க.
 16. தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம்.
 17. ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும்.
 18. புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா.
 19. இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.
 20. 100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால்.
 21. மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார்.
 22. உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க.
 23. இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க
 24. தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க.  
 25. டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர் செய்வாங்க.

16 thoughts on “நம்ம ஊர் – 25

 1. //இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.//

  what r u telling, ur not a tamizhan, how to tell this. im tamilan for long time. dont tell this word. im paavam

  நான் என்ன சொல்ல வர்றேன்னா சத்தியமா எனக்கே புரியலை

  1. 1970ல இருந்து இல்லீங்க… நாம சிந்து சமவெளி நாகரிகம், லெமுரியாக்கண்டம் இருந்தப்பலிருந்தே நாம் மாறவே இல்லை ராம். அப்படியே இருக்கோம் என்பது தான் பிரச்சனையே. நன்றி

 2. ஜானகிராமா

  உன் எழுத்துக்கள் இப்படி இருக்கும்னு நினைச்சு கூட பாக்கல. உன்னோட நண்பன்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு.

  1. சங்கரா, கிண்டல் பண்ணாதே. நீ உன்னோட ஆர்குட்ல எழுதற எழுத்துக்கள் மிரட்டுது. நான் தான் உன்னைப் பத்தி பெருமை பட்டுக்கனும். நீயெல்லாம் படிக்கறதா இருந்தா நான் இன்னும் பொறுப்போடவும் கவனத்தோடவும் எழுதனும். சரி நாம எப்ப சந்திக்கலாம்?

  1. மிக்க நன்றி ஆனந்த். உங்களுடைய வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தைத் தருகிறது. ஆனா, சுஜாதா எல்லாம் என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ரொம்பப் பெரிய ஆளுமை. என்னைச்சுற்றி இருப்பவர்களுக்கு எனக்கு தெரிந்த, நான் பார்த்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கிடைத்தத் தளமாக இந்த ப்ளாக்கை பார்க்கிறேன். பொதுவான விஷயங்கள் பற்றி, நம் ஒவ்வொருத்தரும் நேரம் கிடைக்கும் போது நம்முடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்போமில்லையா.. அதை இந்த ப்ளாகில் எழுத்தாக பதிவு செய்கிறேன். அவ்வளவு தான்.

 3. //பொதுவான விஷயங்கள் பற்றி, நம் ஒவ்வொருத்தரும் நேரம் கிடைக்கும் போது நம்முடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்போமில்லையா.. அதை இந்த ப்ளாகில் எழுத்தாக பதிவு செய்கிறேன். அவ்வளவு தான்.//

  பிளாக்கின் இலக்கணத்தை, இவ்வளவு எளிதாக யாரும் புரிய வைக்கவில்லை. ஆரம்பமே அசத்தல். மற்ற பதிவுகளைப் படித்துவிட்டு கருத்தைத் தெரிவிக்கிறேன்.
  நன்றி.

  1. வருகைக்கு மிக்க நன்றி அமைதி அப்பா. தொடச்சியாக உங்களுடைய பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறேன். பகிர்தலும், பரஸ்பர புரிதலுமே வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s