கைப்புள்ளையோட சென்னைப் பயணம்


அநியாயம், அராஜகம், அக்கிரமம், சகிக்கமுடியாத டார்ச்சர் இவை எல்லாவற்றையும் ஒரு சேர அனுபவிக்க வேண்டுமென்றால் இந்த விடுமுறைகாலத்தில் எதாவது ஒரு நகரத்துக்கு ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்து பாருங்கள்.

போனவாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பவேண்டியிருந்தது. மதுரையிலிருந்து கிளம்பும் போதே காலெண்டரில் என்னுடைய ராசிக்கு வடக்கில் சூலை என்று எழுதியிருந்தது. அதையும் மீறி இப்படி சூனியம் வைத்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்? பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ் பிடிக்க சென்ற போது, நான் வழக்கமாக பயணம் செய்யும் டிராவல் ஏஜென்சிகாரர், டிக்கட் 600 ரூபாய் என்றார். வழக்கமாக 380 ரூபாய் தானே வாங்குவீங்க என்றதற்கு, “அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்” என்று வசனம் பேசினார். நாம என்னமோ தேவையே இல்லாம ஆணி புடுங்க வந்தமாதிரி எகத்தாளமாகப் பார்த்தார். சரி விடுங்கடா என்று 600 ரூபாயைக் கொடுத்து டிக்கட் வாங்கினேன்.

நானாவது பரவாயில்லை. பயணம் செய்வது வடஇந்தியர்கள் என்றால் நம்ம ஆட்கள் தலைக்கு மொட்டையடித்து, சந்தனம் தடவி, ரெண்டு காதிலும் ஒரு முழ பூவை சொருகிவிடுவார்கள் போல. நான் பயணம் செய்த அதே பேருந்தில் நான்கு வடநாட்டவரும் வந்திருந்தனர். அவர்களிடம் ஆளுக்கு 900 ரூபாய் வாங்கியிருந்தனர். இதைக்கேட்டு நமக்கு 300 ரூபாய் மிச்சம் என்று நினைத்துக் கொண்டேன். ஆடு அதுவாவே வந்து பிரியாணி ஆகரேன்னா நம்மாளுங்க விடவாப் போறாங்க?

இவ்வளவு கொடுத்து பயணம் செய்கிறோமே அமர்கின்ற சீட்டாவது நல்லாயிருக்குமா என்றால், எனக்கு வாய்த்த இருக்கையில் புஷ்பேக் துருபிடித்து ஒரே நிலையில் இருந்தது. சீட்டில் உட்கார்ந்தால் வழுக்கிக்கொண்டே சென்றது. நானும் பல ஆங்கிள்களில் நிலையாக உட்கார முயற்சித்து தோற்றுப்போனேன். இதற்க்கிடையில் எனக்கும் என் பக்கத்து ஸீட்காரருக்கும், எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான ஸைடு கைப்பிடியை யார் ஆக்ரமித்துக்கொள்வது என்று ஒரு மௌனயுத்தமே நடந்தது. சைக்கிள் கேப்பில் நான் என்னுடைய செருப்பை ஓரமாக கழற்றி வைக்கும் போது கைப்பிடியை அவர் ஆக்ரமித்துக்கொள்ள, வடை போச்சு!

எப்படியோ சென்னை போய் சேர்ந்தால் போதும் என்று மனதை தேற்றிக்கொண்டு உறங்க முயற்சித்தபோது நான் எதிர்பார்க்காத பயங்கரம் நடந்தது. அந்த பஸ்ஸில் இருந்த பாடாவதி டிவியில் “குருவி” படத்தைப் போட்டு எனது கனவினை வேட்டையாடி விட்டார்கள். என் தலைக்கு நேராக இருந்த ஸ்பீக்கரில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை வில்லனும் விஜயும் மாறி மாறி அடித்தொண்டையில் சவால் விட்டு என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தனர். உறக்கத்துக்கு இடையே கண்விழித்துப் பார்த்தால் விஜய் எதோ ஒரு மலையிலிருந்து இன்னொறு மலைக்கு தவ்விக்கொண்டிருந்தார். அதைவிடக் கொடுமை, எனது பக்கத்து சீட்காரர் அதை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தது தான். காலைல போன உடனே, பக்கத்து சீட்காரரைப் பத்தி ஒரு கண்டனத் தீர்மானத்தை ப்ளாக்கில் எழுதியாகனும் என்ற சபதம் எடுத்தேன்.

இதையும் தாங்கிக்கொண்டு இரும்பு மனதுடன் பயணம் செய்த என்னை, அதிகாலை மூணு மணி வாக்கில் விழுப்புரம் பக்கத்தில் உணவகம் என்ற பெயரில் உள்ள பழைய காயலாங்கடை வாசலில் நிறுத்திப் படுத்தினார்கள். தண்ணீரில் சில சொட்டு பாலைக்கலந்த கலவையை எட்டு ரூபாய்க்கு விற்றனர். சும்மா ஒன்னுக்கிருக்க டாய்லெட் பக்கம் ஒதுங்கினால் ரெண்டு ரூபாய் கேட்டு மிரட்டினார்கள். பெண்களுக்கு மூன்று ரூபாயாம் (எனக்கு ஒரு ரூபாய் மிச்சம்). பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலை 16 ரூபாய்க்கு விற்றார்கள். சுற்றிப்பார்த்தால் 10-15 பஸ்ஸில் என்னைப் போன்றே பல லகுடபாண்டிகள் அந்த மொக்கைக்கடையில் தெரிந்தே ஏமார்ந்துகொண்டிருந்தனர். நேரங்கெட்ட நேரத்தில் கூட டிரைவரும் கண்டக்டரும் ஓசி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு திருப்தியாக தம் அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “அண்ணே, தாம்பரத்துக்கு அஞ்சு மணிக்கெல்லாம் வண்டி போகுமா?” என்று கேட்டதற்கு, ஆறு மணி ஆயிடும் என்றார்கள். “வண்டி ஏறும்போது நாலு மணிக்கெல்லாம் கோயம்பேடுக்கே போயிடும் என்று ஏஜென்ஸிகாரன் சொன்னானே…” என்றதற்கு, “போகும்; ஆனா போகாது..” என்ற ரீதியில் பதிலளித்து கடுப்பேற்றினார்கள்.

எப்படியோ எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஆறு மணி போல தாம்பரம் வந்திறங்கினால், “எங்க சார் போகனும்?” என்று கேட்டவாறு முகமூடி போடாத கொள்ளைக்கூட்டமாக ஒன்றுக்கு நான்கு ஆட்டோக்காரர்கள் எனக்கு முன்னே முட்டிக்கொண்டிருந்தனர். நானும் எவ்வளவு நேரந்தான் பர்ஸ்ல பணம் இருக்கறமாதிரியே நடிக்கறது? முடியல… அழுதுட்டேன். (சென்னையில இருந்து மதுரைக்கு கவர்ன்மென்ட் பஸ்ல போனது இதைவிட பெரிய சோகக்கதைண்ணே… மனசத் தேத்திக்கிட்டு அப்புறமா அந்தக்கதைய சொல்றேன்)

Advertisements
Comments
24 Responses to “கைப்புள்ளையோட சென்னைப் பயணம்”
 1. kalanesan சொல்கிறார்:

  இடுகைக்கு ஏற்ற புகைப்படம்.

  நன்று

 2. krpsenthil சொல்கிறார்:

  அண்ணே எவ்ளோ நல்லவரு ….

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   செந்தில் அண்ணே, பஸ் பயணங்களில் எவ்வளவு அக்ரமம் பண்ணினால் தமிழ்நாட்டு ஜனங்க தாங்கறாங்க. நம்ம எல்லாரையும் ரொம்ப நல்லவங்கன்னு தான்ணே வியாபாரிங்க சொல்றாங்க.

 3. JM சொல்கிறார்:

  Super. Athuvum kuruvi padam pathi sonathu supero super. Kilambarathukku munnala rendu mani neram round adichatha pathi onnum sollala?

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   நண்பா, எப்பவுமே கஷ்டத்தை கஷ்டப்படும் போது கஷ்டமாகத் தான் இருக்கும். அதையே பின்னாடி அதை நினைச்சுப் பாத்தா கமெடியா இருக்கும். ஆனா எப்பவுமே விஜய் படம் நமக்கு ராகுகாலம் தான்.

 4. ramesh சொல்கிறார்:

  same blood brother

 5. jayanthi சொல்கிறார்:

  உங்களுக்கு 301 ரூபா மிச்சமானத நெனச்சு சந்தோஷப்பட்டுக்கனும்.

 6. kvpanand சொல்கிறார்:

  Pls dont simply blame omni bus. Havent you seen regular omni buses operating with regular fare even in rush times.

  Its your fault to go to a broker / tout and book a ticket. All these crowd is for one month only.

  come after june 15th. People will negotiate with the touts for 200/- rs to madurai and 120 Rs to Tiruchy from chennai. Enga kannula ratham varum nanba….

  Kuruvi padam nalla illana Stalin payan kitta poi kelunga…. athukku omni bus enna seivanga…

  ithu konjam overa theriyala….

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   dear anand, thanks for coming and posting your comments. with fullest respect i value your comment. I think you know better, how many of omni bus services are honest in this period. if kuruvi is utter flap, why the omnibus bus person is playing it? rather as a passenger, we prefer a calm and silent journey. then tell me, about the motels the bus stops in the journey time. Is any thing right with them. I do understand the issues of travel agencies. but, most time, passengers are cheated by agencies. Why you encourage brokers, if they do harm to travelers? Only in this peak season, most of the agencies are bringing unfair buses with high cost. In spite of these, if you share some genuine bus agencies, I’m ready to salute them and beg apology from them. As a blogger, I only posted my personal experience, which is ironic and unethical to my point of view. thanks again.

 7. உதயகுமார் சொல்கிறார்:

  என்னதான் பஸ் ஸ்டாண்டுக்கு “பெரியார்” பெயரை வெச்சாலும் நம்மாளுங்க வெக்கிற சூனியம் பலிக்குதே!!!

 8. Ramesh சொல்கிறார்:

  ஒரு தடவ நான் பஸ்ல போகும்போது ஆதியும் வரும்போது பரமசிவனும் போட்டாங்க. புல் சவுண்ட். சவுண்ட் குறைக்கவே மாட்டாங்க. அந்த சவுண்ட்ல தூங்கவும் முடியாது. தலைவலியோட வர்றதுதான் மிச்சம்.

 9. senguttuvan சொல்கிறார்:

  anne
  driver conductara pathi appadi ellaam sollapadaathu…
  namma ponmudioda sontha kaaranga ottal athu
  nikkama pona nalaikku yaaru memo vaangurathu..
  paavan avinga romba naalavangaa…
  rendu pakkamum evvalavu adichaalum thangurainga..

 10. Raj சொல்கிறார்:

  Auto illa, athe omni bus varum ana varathu

 11. Anand சொல்கிறார்:

  Dear Mr. Janaki Raman,

  Thanks for your comments. As you said the motels in villupuram is managed by Ponmudi’s brother and we have to stop there. Otherwise problem.

  Have you noticed hotel in the outer ring road of madurai where we stop while comming. The food quality is good as well as economical. Simillarly in madurai to tirunelveli sector no passengers complaint about the hotel since we stop at good hotel.

  Lot of newspapers and public have written articles in newspaper about the worst hotels and do they ever change?

  what should we do? Find a solution as a common Man….your suggestions are welcome.

  Regarding the brokers…. the interesting fact is that people rely on brokers words… brokers know how to cheat.

  I can tell a incident as a sample. Our office booking clerk is standing in front of koyambedu bus stand and calling for unfilled seats.

  One person approached and asked the fare and he said Rs. 500/- and the traveller refused and went inside search of other bus.

  After 10 minutes…he comes with a broker for the same ticket and the broker tells a secret code which means Rs. 650/- to be charged. The traveller mutely buys the ticket for 650/- and travels.

  Whose mistake is this? Even we operators are very much irritated by these brokers. Without any investment, they simply earn 2000 – 3000 rupees everyday as commision and even that money wont go for good cause.

  They will drink fully and do all unlawful things and joins as group and annoys us.

  Di the police took any action against them so far.

  Whose mistake is this?

  Public like you people should solve this issues by raising your voice against the bad things.

  We bus operators are also comman man like you and we are not terorists from pakistan.

  Pls try to understand the basic problem and try to solve this using the blog.

  Thanks Friend

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   dear anand, thanks for your constructive reply. Now I understand the dynamics. My intention is not complaining travel agencies. It is just a snapshot of a common man, who crosses such incidents. (That’s why I have narrated the full post in a lite mode) As you rightly said, the problem is bigger. We need to educate or at least reinforce about good thing. Media is right forum and lets do our best. Thanks again.

 12. Anand சொல்கிறார்:

  Thank you My Dear Friend….

 13. Radhika சொல்கிறார்:

  ரியல்லி சூப்பர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: