சிறுவனும் சிறுமியும்


ஒரு சிறுவனும் சிறுமியும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவன் கூழாங்கற்களை சேகரித்துக்கொண்டிருந்தான். சிறுமி பழங்களை சேகரித்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக்கொண்ட போது, சிறுமியிடம் இருந்த பழங்களைப் பார்த்து ஆசைப்பட்ட சிறுவன், கூழாங்கல்லுக்கு பழங்களை மாற்றிக்கொள்ளலாமா என்று சிறுமியிடம் கேட்டான். சிறுமியும் ஒத்துக்கொள்ள, சிறுவன் அவனிடம் இருப்பதிலேயே மிக அழகான கூழாங்கல்லை மட்டும் மறைத்து வைத்துக்கொண்டு மிச்சமிருக்கும் கூழாங்கல்லை சிறுமிடம் கொடுத்தான். சிறுமி அவளிடமிருந்த எல்லாப் பழங்களையும் மறைக்காமல் சிறுவனுக்கு கொடுத்தாள்.

அன்று இரவு சிறுமி நன்றாக உறங்கினாள். சிறுவனுக்கு உறக்கம் வரவில்லை. தான் கூழாங்கல்லை மறைத்து வைத்துக்கொண்டது போல, சிறுமி எதாவது பழத்தை தன்னிடமிருந்து மறைத்திருப்பாளோ என்ற யோசனையில் தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

Advertisements
Comments
8 Responses to “சிறுவனும் சிறுமியும்”
 1. Amina சொல்கிறார்:

  //எண்ணம் போல் வாழ்வு னு சும்மாவா சொல்லி வைச்சாங்க! பதுக்கி வைச்சது கல்லாக இருக்கலாம் ஆனால் இழந்தது என்னவோ அந்த சிறுவன் தான். இழந்தது நிம்மதியை, தூக்கத்தை, நம்பகத்தன்மையை …. இப்படி இழப்பை அடுக்கிக்கொண்டே போகலாம்.

  என்னை பொறுத்தவரை “பெறுவதை காட்டிலும் கொடுப்பதே சிறந்தது”. வாங்குகிற சம்பளத்தை நான்கு குடும்பத்துக்கு பிரிச்சுக்குடுத்தாலும், இதுவரைக்கும் எந்த குறைவும் வரலங்க, மனசு நிறைந்து நிம்மதியா வாழறோம்//

 2. ஜானகிராமன் சொல்கிறார்:

  உண்மைதான் அமினா, உறவு முறையிலும் பணிச்சூழலிலும் நாம் நம்முடைய 100% தரமுடியவில்லை என்றால் நிச்சயம் சஞ்சலம் வரத்தான் செய்யும். பெரும்பாலும் நாம் நம்மிடம் மற்றவர் உண்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே தவிர நாம் மற்றவருக்கு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்று ஆய்வதில்லை. “பெறுவதை காட்டிலும் கொடுப்பதே சிறந்தது” என்ற மனநிலை உன்னதம். அதைப் புரிந்து செய்தால் அதுவே சொர்கம். நன்றி.

 3. aruna சொல்கிறார்:

  மனதில் கள்ளம் வந்தாலே நிம்மதி போயிடுமே!

 4. ஜானகிராமன் சொல்கிறார்:

  நன்றி அருணா. கள்ளம் வந்தால் நிம்மதி மட்டுமல்ல, நம்முடைய சுயமும் மறைந்துவிடுகிறது

 5. Bharathi சொல்கிறார்:

  This guilty conscious is essential for all humans.
  Sad to see this humanity only in stories, these days.
  How about Raja’s sleep in Thihar?

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   உங்கள் பதிலிடலுக்கு நன்றி பாரதி. நீங்க சொன்னது ரொம்பச் சரியான வார்த்தை பாரதி. குற்றஉணர்வு இல்லைன்னா மனிதன் தன்னைத் திருத்திக்கொள்வதற்கு முடியவே முடியாது. அது நல்லவர்களுக்கு மட்டுமே வரும். ராஜா போன்றவர்கள் எல்லாம் குற்றஉணர்வை தாண்டியவர்கள். தன்னை வெளிப்படுத்தியவர்களின் மீதான வன்மம் அவரைத் தூங்கவிடாமல் செய்யும் என்று நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: