சுறா – முன்கதையோட்டம்


சுறா படம் சூறாவளியாக தியேட்டர்களை சுழற்றி அடிக்கப்போகிறது. படத்தின் ஆரம்ப காட்சியே இது வரை உலக திரைப்பட வரலாற்றில் யாரும் யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு வெறித்தனமாக இருந்து பட்டையை கிளப்புகிறது.

ஆரம்பக் காட்சியில் கடற்கரை. ஒலிப்பெருக்கி சுனாமி வருகிறதென எச்சரிக்கை அலறுகிறது. மக்கள் அனைவரும் அடித்துப்பிடித்து கரையை நோக்கி ஓடுகிறார்கள். இளைய தளபதி ஒருகையில் கட்டுமரத்தைப் பிடித்துக்கொண்டு கடலை நோக்கி வீர நடை போட்டு வருகிறார். ஒரு வழிப்போக்கர், “தம்பி கடலுகிட்ட போகாதீங்க சுனாமி வருது” என்று சொல்ல… “…சுனாமிய பாத்து பயப்பட நான் ஒன்னும் புறா இல்லடா அந்த சுனாமியே பாத்து பயப்படும் சுறா!” (அப்பாடா டைட்டிலுக்கும் கதைக்கும் லிங்க் கிடைச்சுடுச்சி) என்கிறார்.

அந்த கட்டுமரத்தில் தனியாளாக ஏறி சுனாமி அலையை தனது துடுப்பால் ஒரு அடி அடிக்க சுனாமி சிக்கன்குனியா காய்ச்சல் வந்தது போல் சுருண்டு விழுகிறது. பிறகு கரையேறி வரும் இ.தளபதியை இதற்காகவே காத்திருந்த கூட்டம் ஆலம் எடுத்து, குலவை போட பாட்டு ஆரம்பம்.

நான் தான் பச்ச மஞ்ச பிங்க் கலரு தமிழன், உன்னோட ஒன்னுவிட்ட அண்ணன், ஏழை எல்லாம் முன்னேறனும், உழைச்சு சாப்பிடனும், 3011ல நாம தான் அமெரிக்க அதிபர் – அண்டார்டிக்கா பிரதமர் என்று தத்துவப்பாட்டை பாடிச்செல்கிறார். பின்னாடியே ஒரு 20,30 பேர் ஒரே கலர் சட்டையை போட்டு (எங்கிட்டிருந்து தான் வந்தாய்ங்களோ) சொல்லி வெச்சாப்புல ஒரேவிதமான டான்ஸ் மூவ்மெண்ட்டை கொடுக்கிறார்கள்.

ஆரம்பக் காட்சியின் கிலி அடங்குவதற்காக அடுத்த காட்சியில் தமண்னா வந்து குளுமைப் படுத்துகிறார். வடிவேலுவும் இ.தளபதியும் சேர்ந்து சில சீன்களில் தமண்ணாவை கலாய்க்க, தமண்ணா சில சித்து வேலைகள் செய்ய இடையே இரண்டு மூன்று டூயட் பாடல்கள் வேறு ஓட இருவருக்கும் இடையே அமரக்காதல் முளைக்கிறது. அநியாயம் செய்யும் முதலாளிகளை இ.தளபதி தட்டிக்கேட்க ரவுடிகள் பெரிய அலப்பரையுடன் என்ட்ரி கொடுக்கிறார்கள். சில பல சவால்கள் சவடால்களுக்குப் பிறகு இ.தளபதியிடம் அடி வாங்கி அடக்கமாகிறார்கள்.

இதனிடையே மானே தேனே என்று போட்டுக்கொள்வது போல் வடிவேலு காமெடி, குடும்ப பாசம், இ.தளபதியோட வீரபராக்கிரமங்கள் வந்து செல்கின்றன. மொத்தத்தில் இந்த படத்துக்கு சுறா என்று பெயர் வைத்ததைவிட தமிழ்படம் பார்ட் 2 என்று வைத்திருக்கலாம்.

ஆஆவ்… நினைக்கும் போதே கண்ண கட்டுதே… படத்தோட டிரெய்லர சன்டீவியில் பாத்ததுக்கே எனக்கு இந்த எபக்ட்னா, கத்தரி வெயிலில் ரிலிசாகப்போகும் முழு சுறா படத்தை பாக்கும் தைரியம் யாருக்கு இருக்கு? ஓடுங்க.. ஓடுங்க.. அது நம்மளை குறிபாத்து ஓடி வந்திட்டு இருக்கு…

13 thoughts on “சுறா – முன்கதையோட்டம்

  1. ஆமாங்க யுவா, இவிங்க சங்காதமே வேணாம்னாலும் அவிங்க நம்மல விடாம அலப்பறாங்களே. இதுக்கு முடிவு வேணாமா?

    நன்றி மனோ. தப்பித்தவறி தியேட்டர் பக்கம் போயிடாதீங்க. (நமக்கெல்லாம் படத்தப்பாக்காம விமர்சனம் எழுதும் கெபாசிட்டி இந்நேரம் வந்திருக்கனும்)

  2. ஆரம்பிச்சிட்டிங்களா? படம் வர முதலே ஒரு படத்தை தரக்குறைவாக நோக்கும் உங்களை என்ன சொல்வது. ஹையோ ஹையோ.

  3. ‘சுறா’ விளம்பரத்துக்கு பயந்து சன் டி.வி., கே டி.வி பார்க்காம பதிவு பக்கம் வந்தா… இங்கையும்மா…!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s