• இணைந்திருப்பது இனிது

கரடி குட்டி

வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது.  இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான … Read more

கரைந்து போகும் பெண் குழந்தைகள்

சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் அலுவல் ரீதியாக ஒரு மருத்துவரிடம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, இன்னமும் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் அவலம் மறைமுகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். அரசு, கர்ப்பகாலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பதை அறிய சட்டபூர்வ தடை செய்து, அவ்வாறு கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் ஸ்கேனிங் மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் நகரத்தைத் தாண்டி உட்பகுதியில் உள்ள  மையங்கள் … Read more

அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.

திருத்தணிக்குப் பக்கத்தில் பனப்பாக்கம் என்ற கிராமத்திலிருக்கும் விவசாயி வடிவேலு அய்யா.  ஒருமுறை இவரது கிராமத்தில் ஏரி மதகை சரி செய்வதற்காக 1.5 இலட்சம் ரூபாயில் காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். காண்ட்ராக்ட் எடுத்தவர் பெயருக்கு வேலை செய்துவிட்டு மிச்ச பணத்தை சுருட்டியிருக்கிறார். இதை கேள்வி பட்ட வடிவேலு அய்யா, அவருடன் சண்டை போட்டிருக்கிறார். முதலில் அவர்கள் கொஞ்ச பணத்தை இவருக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு பேரம் பேசியிருக்கிறார்கள். இவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள். இவர் மசியவில்லை. ஒரு புகார் … Read more

டீ பிரேக் 1

[டீ பிரேக் என்பது, ஒரு தொகுப்புப் பதிவு. எனக்குத் தெரிந்த, படித்த பல சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு. வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். ]   ஒரு கதை… புத்தரும் அவருடைய சீடரும் ஒரு ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ளவர்கள் புத்தரை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தனர். அவரை அசிங்கப்படுத்தினர். ஆனால் புத்தர் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அவருடைய சீடருக்கு இது அடங்காத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மக்களை பார்த்து பதிலுக்குத் திட்டினார். … Read more

தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும்

15 வருஷத்துக்கு முன்பு குமுதத்தில் வந்த கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. சென்னையையே பார்க்காத கிராமத்து மனிதரை சென்னைக்கு கூட்டிவந்து, ஊர் சுற்றிக்காட்டி அவருடைய ரியாக்ஷன்களை பதிவுசெய்திருந்தார்கள். அதில் ஒரு அங்கமாக சினிமா படபிடிப்பினை பார்வையிடவைத்திருந்தனர். அந்த டைரக்டரை தயங்கித் தயங்கி கிராமத்தவர், “சினிமாவை எப்படி 3 மணி நேரத்தில் எடுக்கமுடியுது?” என்று கேட்ட அவரின் கேள்வி நமது மக்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பொதுஜனங்களிடையே சினிமா பற்றி இருக்கும் இது போன்ற மாயவியப்பின் விளைவாகவே … Read more

ஓ போடு…

ஓட்டுப் போடு; பிடிக்கலைன்னா 49-ஓ போடு.. (கார்டூன்:http://onegirlathousandwords.wordpress.com/) போனமாதம், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம். அதையொட்டி, எங்க ஊரில் நிறைய பேனர்கள் ரோட்டரி க்ளப் மூலமாக வைத்திருந்தனர். அவை எல்லாம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது கடமை என வலியுத்தியது. எல்லா சுவரொட்டிகளிலும் எங்கள் மாவட்ட ஆட்சியர், வாக்காளர்கள் நேர்மையாகவும் தவறாமலும் வாக்களிப்பதை வலியுருத்தினார். இதைப்பார்த்த என்னுடைய நண்பன் “வாக்காளர்களை காசு வாங்காம ஓட்டுப்போடச் சொல்வதற்கு முன் தப்பே செய்யாத நல்ல வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தச்சொல்லனும்” … Read more

பசியுடனிரு, முட்டாளாயிரு…

சென்ற மாதம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்னுடைய வண்டிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியும் வண்டி வரவில்லை. டீ குடிக்க பர்சை துழாவியபோது, ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. சில்லரையில்லாமல் நம்ம ஊர் பஸ்ஸில் ஏறினால், கண்டக்டர், ஏதோ நாம் சில்லரையில்லாமல் பயணம் செய்யவே நேர்ந்து விட்டு வருவதைப்போல, இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து டிக்கட்டின் பின்புறம் 500/1 என்று எழுதிக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார். நாம் இறங்கவேண்டிய இடம் வரும்வரை மறக்காமல் அவரை … Read more

எந்திரன்: சாரி ஷங்கர்

வீட்டுக்காரம்மாவோட தொந்தரவு தாங்காமல் நேற்று மாலை எந்திரன் போகவேண்டியிருந்தது. எங்க ஊரில் எந்திரன் ஃபீவர் ஒரு வாரத்துக்குள்ளேயே குறைஞ்சிடுச்சு. ஈவினிங் ஷோ, 50ரூபாய்க்கே கோல்டன் மினியில் டிக்கட் கிடைத்தது. (ஆனா, 20 நாள் கழித்தும், நான் மகான் அல்ல படத்துக்கு 60 ரூபாய் கொடுத்துப் போனேன்.) படத்தில் ஷங்கர், ரஜினி, ரத்தினவேலு மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடினமான உழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. தமிழக தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியதில் நிச்சயம் எந்திரன் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஆனால் … Read more

வலசை போதல்

வடபழனி வசந்தபவனில் நேற்றிரவு உணவு சாப்பிட்டு விட்டு காபியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது நான் சாப்பிட்டத் தட்டை எடுக்க தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த கிளீனர் சிறுவனைப் பார்த்தபோது வித்தியாசமாகப் பட்டது. அவன் வடகிழக்கு மாநிலத்திலிருந்து வந்திருப்பான் போல. சுற்றுமுற்றும் பார்த்த போது அவன் வயதை ஒத்த பல சிறுவர்கள் அங்கு பணியிலிருந்தார்கள். இதே போல் வடகிழக்கு மாநிலச் சிறுவர்களை மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம் என்று பல இடங்களில் குறிப்பாக உணவகங்களில் சமீபத்தில் பார்த்து வருகிறேன். ஆச்சரியமாக இருந்தது. பிழைப்புக்காக … Read more

ம.ம.உலகம் (பகுதி 3)

கிராமப்புறங்களில் இன்னும் சில குடும்பங்கள் பாரம்பரிய விதைகளை காலங்காலமாக பாதுகாத்து வருகின்றனர். தம்முடைய நிலத்தில் விளைந்த தானியங்களை நான்கு பங்குகளாக பிரித்து, அடுத்த வருட விதைக்காக ஒரு பங்கும், தமது உணவுக்காக ஒரு பங்கும்,  விவசாயத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்கும் எடுத்து வைத்து மீதமானதை விற்கும் பழக்கம் இன்றும் உள்ளது. விதைக்காக ஒதுக்கப்பட்ட தானியத்தை தனியாக ஒரு மண்குடுவையில் இட்டு, அதற்கு வெளிப்புறம் குளுமைக்காக செம்மண் பூசி, சுத்தமான இருட்டு அறையில் வருடம் முழுக்க … Read more

Follow

Get every new post delivered to your Inbox.